கீழக்கரை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் ஒரு சிலர் வெளிநாட்டு புறாவியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்புறாக்கள்பிரான்ஸ்,அமெரிக்கா போன்ற ஐரோப்பியா நாடுகளை சேர்ந்தவை.இப்புறாக்களின் விலையோ பல்லாயிரம்.இவ்வகை புறாக்களில் பிரெஞ்ச்மவுட்டைன் ரூ 80ஆயிரம் ,மேக்ஸி பவுட்டர் ரூ 40 ஆயிரம்,மால்தீவிஸ்வெள்ளை ரூ40ஆயிரம், கிங் ரூ50 ஆயிரம் என்ற வகையில் விலைக்குவிற்கப்படுகிறது.
அழகிற்காக வளர்க்கப்படும் இந்த புறாக்கள் அழகு பதுமைகளாகவீட்டில் இருக்கும்.வெளியே பறக்க அனுமதிக்கப்படுவதில்லை.பறவைகள்வளர்ப்பதில் ஆர்வமுள்ள வசதி படைத்தவர்கள் இதை வாங்குவதில்ஆர்வம் காட்டுகின்றனர். வருடம் 12 முட்டை வரை இடும் இந்த ஐரோப்பிய புறாக்களை வளர்ப்பதில் மிகுந்த கவனம் செலுத்தவேண்டும்.உணவாக பட்டாணி போன்ற தானிய வகைகளை உட்கொள்ளும்.நோய்கிருமிகள் தொற்றி கொள்ளாமல் மிகுந்த பாதுகாப்புடன் வளர்க்கவேண்டும் மேலும் இந்த வெளிநாட்டு புறா வியாபாரம் மிகுந்த லாபமுடையதுஆனால் சத்தமில்லாமல் இந்த வியாபாரம் சக்கை போடு போடுவதாக பறவைஆர்வலர்கள் கூறுகின்றனர்.
பறவைகள் வளர்ப்பதில் ஆர்வமுடைய ஹாஜா அலாவுதீன் கூறியதாவது,
ஐரோப்பிய புறாக்கள் வியாபாரத்தில் ஒரு புறாவுக்கு ரூ 10 ஆயிரம் வரைலாபம் கிடைக்க வாய்ப்புள்ளது.அதே சமயம் அதை பராமரித்துவளர்ப்பதில் அதிகம் சிரத்தை எடுக்க வேண்டும் இல்லையென்றால் நோய்கள்தொற்றி இறந்து போகும் வாய்ப்பு அதிகம்.இவ்வகை புறாக்கள்தமிழகத்தில் பொள்ளாச்சியில் அதிக அளவில் விற்கப்படுகிறது. தற்போதுஇண்டெர்நெட் மூலம் இந்த வியாபாரம் நடைபெறுகிறது.கொஞ்சம் முதலீடும் பறவைகள் வளர்ப்பில் அனுபவமும் இருந்தால் அதிக லாபம் ஈட்டலாம்.
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.