

மாவட்ட கலெக்டர் அருண்ராயுடன் வெற்றி பெற்ற கீழக்கரை இளைஞர்கள்
மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டியில், கீழக்கரை மூர் வாலிபால் அணி சுழற் கோப்பையை வென்றது.
ராமநாதபுரம் மாவட்ட கைப்பந்து கழகம் மற்றும் அபிராமி சில்க்ஸ், ஆயிஷா டெக்ஸ்டைல்ஸ் இணைந்து 14வது ஆண்கள், மாணவர்கள், மாணவிகள் பங்கேற்ற மாவட்ட சாம்பியன் கைப்பந்து போட்டியை நடத்தின. ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு மைதானத்தில் 2 நாட்கள் நடந்த இப்போட்டியில், பல்வேறு பள்ளி மாணவ, மாணவிகள், கைப்பந்து விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.
மாணவிகளுக்கான போட்டியில், புதுமடம் அரபிஒலியுல்லா பள்ளி மாணவிகள் முதலிடமும், பரமக்குடி கே.ஜே. முஸ்லீம் பள்ளி மாணவிகள் 2வது இடமும் பெற்றனர். மாணவர்களுக்கான போட்டியில் சித்தார்கோட்டை முகமதியா பள்ளி மாணவர்கள் முதலிடமும், கீழக்கரை இஸ்லாமியா மே.நி.பள்ளி மாணவர்கள் 2வது இடமும் பெற்றனர்.
ஆண்களுக்கான இறுதி போட்டியில் கீழக்கரை மூர் வாலிபால் கிளப் அணி வெற்றி பெற்று சுழற் கோப்பையை கைப்பற்றியது. 2வது இடத்தை கீழக்கரை மைபா கிளப் அணி வெற்றி பெற்றது.

வெற்றி பெற்றது குறித்து மூர் விளையாட்டு அணியின் நிர்வாகி ஹசனுதீன் மகிழ்ச்சி தெரிவித்தார்.
வெற்றி பெற்ற அணிக்கு பரிசளிப்பு விழா சீதக்காதி சேதுபதி விளையாட்டு மைதானத்தில் நடந்தது. மாவட்ட கைப்பந்து கழகத்தலைவர் ரவிச்சந்திரராமவன்னி தலைமை வகித்தார். செயலாளர் ராமசுந்தரம் வரவேற்றார். கலெக்டர் அருண்ராய் வெற்றி பெற்ற அணியினருக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் சுழல்கோப்பையை வழங்கினார். எஸ்.பி. காளிராஜ் மகேஷ்குமார், மாவட்ட விளையாட்டு அலுவலர் பாலசுதந்திரதாஸ், கைபந்து கழக நிர்வாகிகள் டாக்டர் கியாதுதீன், கே.ஆர். செழியன், வழக்கறிஞர் சோமசுந்தரம், ரோட்டரிசங்க தலைவர் முனியசாமி, ரோட்டரி துணை ஆளுனர் தினேஷ்பாபு, சண்முகராஜேஸ்வரன், அபிராமி டெக்ஸ்டைல்ஸ் நிர்வாகி அன்சர்அலிகான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
congratulation to all our moor volleyball club players.
ReplyDelete