துபாயில் கீழக்கரை பகுதி உணவுகள் கிடைக்கும் வகையில் 'அல் அமீன்' என்ற பெயரில் உணவகம் இன்று காலை திறந்து வைக்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் கீழக்கரையை சேர்ந்தோர் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கு பெற்றனர்.
கீழக்கரையை சேர்ந்த இன்ஜினியர் ஆசாத்,சீனி இப்ராகிம்,ஹசன்(நூர் அப்டிகல்ஸ்),பைரோஸ்,அமீன் பாஷா உள்ளிட்டவர்கள் இக்கடையின் நிர்வாகிகள்.
துபாய் தேரா பகுதியில் கல்ப் ஏர் பில்டிங் பின்புறம் முக்கிய பகுதியில் திறக்கப்பட்டுள்ள இக்கடையின் நிர்வாகிகளில் ஒருவரான சீனி இப்ராஹிம் கூறுகையில்,
துபாயில் நமதூர் ருசிக்கு ஏற்றவாறு உள்ள உணவு விடுதிகள் குறைவாகவே உள்ளது அந்த அடிப்படையில் கீழக்கரை பகுதி வீடுகளில் தயாரிக்கப்படும் உணவுகளின் ருசி இங்கு கிடைக்குமாறு உணவுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதற்காக கீழக்கரையிலிருந்து சமையல் மாஸ்டர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர்.காலையில் இடியப்பம் மாசி சம்பல் ,பகல் சீலா மீன் வறுவல்,மீன் ஆனம் என்பன உள்ளிட்ட பல்வேறு வகை உணவுகளை தயாரிக்க உள்ளோம்
வியாபரம் செய்து லாபம் சம்பாதிப்பதோடு மட்டுமில்லாமல் நம் ஊரை விட்டு பிரிந்து வந்துள்ள நம் மக்களுக்கு நமதூர் வகை உணவுகளை கொடுக்க வேண்டும் என்ற எங்கள் எண்ணம் நிறைவேற உங்கள் ஆதரவை தர அன்போடு கேட்டு கொள்கிறோம்.துபாய் வரும் நம் மக்கள் எங்களின் கடைக்கு ஒருமுறை வந்து செல்ல வேண்டும் என்றார்.
தொடர்புக்கு மொபைல் எண்...0552243635
vaazthukkal ungal muyarchi vetripera allah thunai nirpan
ReplyDelete