Saturday, March 9, 2013

பெண்க‌ளுக்கு கொடுமை ஏற்ப‌ட‌ பெண்க‌ளும் ஒரு கார‌ண‌ம்!தாசிம்பீவி க‌ல்லூரி முத‌ல்வ‌ர் சுமையா பேச்சு!

" முக‌ம்ம‌து ந‌பி(ஸ‌ல்) அவ‌ர்க‌ள் போதித்த பெண் சுத‌ந்திர‌ம்" என்ற‌ தலைப்பில் ந‌டைபெற்ற‌ க‌ட்டுரை போட்டியில் மாநில அள‌வில் இர‌ண்டாவ‌து ப‌ரிசு பெற்ற‌ தாசிம்பீவி க‌ல்லூரி மாண‌வி  ஹேம‌ல‌தாவை பாராட்டி க‌ல்லூரி ம‌க‌ளிர் தின‌ விழாவில் ப‌ரிசு ம‌ற்றும் சான்றித‌ழ் வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்டது


கீழ‌க்க‌ரை தாசிம் மக‌ளிர் க‌ல்லூரியின் ம‌க‌ளிர் தின‌ விழா ந‌டைபெற்ற‌து.க‌ல்லூரி முத‌ல்வ‌ர் சுமையா த‌லைமை வ‌கித்தார்.த‌மிழ்நாடு இஸ்லாமிய‌ மாண‌வ‌ர் பேர‌வை பொது செய‌லாள‌ர் சிக்க‌ந்த‌ர் பாஷா,ம‌ன ந‌ல‌ ஆலோச‌க‌ர் சுபைர்,செய்ய‌து முக‌ம்ம‌து ஹீசைன்,துணை முத‌ல்வ‌ர் நாதிரா பானு க‌மால் முன்னிலை வ‌கித்தார்.க‌ல்லூரி மாண‌வர் பேர‌வை த‌லைவ‌ர் பாத்திமா ருஸ்தா வ‌ர‌வேற்றார்.

க‌ல்லூரி முத‌ல்வ‌ர் சுமையா பேசிய‌தாவ‌து,

 நாள்தோறும் மீடியாக்க‌ளில் பெண்க‌ள் ப‌லாத்காரம்,சிறுமி ப‌லாத்கார‌ம் என்று செய்திக‌ள் வ‌ருகிற‌து.பெண்க‌ளுக்கு கொடுமை ஏற்ப‌ட‌ பெண்க‌ளும் ஒரு கார‌ண‌ம் உதார‌ண‌த்திற்கு பெண்க‌ள் வெளியில் செல்லுபோதும் ம‌ற்ற‌ ஆண்க‌ளுக்கு த‌ங்க‌ளின் அழ‌கை காட்டும்ப‌டியாக‌ உடைக‌ளை அணிந்து செல்ல‌க்கூடாது.மேலும் இங்கு ப‌டிக்கும் 1800 மாண‌விக‌ளும் வ‌ருங்கால‌த்தில் குடும்ப‌ த‌லைவிக‌ளாக‌ உருவெடுத்து பிள்ளை செல்வ‌ங்க‌ளை பெற்றெடுக்க‌ போகிறீர்க‌ள் என‌வே நீங்க‌ள் ம‌ற்ற‌வ‌ர்க‌ளுக்கு உதார‌ண‌மாக‌ ந‌ட‌ந்து கொள்ள‌ வேண்டும் அப்போது தான் நீங்க‌ள் பெற்றெடுக்கும் குழ‌ந்தைக‌ளை ந‌ல்ல‌ முறையில் வ‌ள‌ர்க்க‌ முடியும் என்றார்.

நிக‌ழ்ச்சியில் ப‌ல்வேறு போட்டிக‌ளில் வெற்றி பெற்ற‌ மாண‌விக‌ளுக்கு ப‌ரிசுக‌ள் வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்ட‌ன.
ந‌வ‌ம்ப‌ர் மாத‌ம் த‌மிழ்நாடு இஸ்லாமிய‌ மாண‌வ‌ர் பேர‌வை சார்பாக‌ மாநில‌ அள‌வில் ந‌டைபெற்ற‌ முக‌ம்ம‌து ந‌பி(ஸ‌ல்)போதித்த பெண் சுத‌ந்திர‌ம் என்ற‌ தலைப்பில் ந‌டைபெற்ற‌ க‌ட்டுரை போட்டியில் மாநில அள‌வில் இர‌ண்டாம் ப‌ரிசு பெற்ற‌ க‌ணிணி அறிவிய‌ல் துறை மாண‌வி ஹேம‌ல‌தாவை பாராட்டி ப‌ரிசு ம‌ற்றும் சான்றித‌ழ் வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்ட‌து.
ஏற்பாடுக‌ளை சீத‌க்காதி அற‌க்க‌ட்டளை கீழ‌க்கரை பொது மேலாள‌ர் சேக் தாவூத் ம‌ற்றும் துறை த‌லைவ‌ர்க‌ள் செய்திருந்த‌ன‌ர்.

1 comment:

  1. மங்காத்தாவின் தங்கச்சி மகன்March 9, 2013 at 9:15 PM

    மாற்று மத சகோதரி/மாணவி: செல்வி ஹேமலதா, நபி ஸல்லலாஹூ அலைஹி வ ஸல்லம் போதித்த பெண் சுதந்திரம் எனற தலைப்பில் இஸ்லாத்தில் அவரின் தேடலுக்கும். முயற்சிக்கு பரிசுகளும், சான்றிதழும், பாராட்டுதலும் வழங்கப்பட்டது வரவேற்கத்தக்க சீரிய செயலாகும். அவருக்கு உளம் கனிந்த பாரட்டுகளும், வாழ்த்துகளும்.

    முதல்வர் அவர்களின் கனிவான பார்வைக்கு

    மறு பதிப்பு

    மங்காத்தாவின் தங்கச்சி மகன்23 December 2012 1:11 pm keelakaraitimes.blogspot.
    இதயம் கனிந்த நல்வாழ்த்துகள். மேன்மேலும் சிறப்படைய வல்ல ரஹ்மானிடத்தில் பிரார்த்திக்கின்றோம்..

    இந்த இனிய நேரத்தில் வேதனையோடு ஒரு செய்தியை நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறோம்..

    கடந்த மூன்று வருட காலத்தில் கீழக்கரையில் நடந்த திருமணங்களில் கணிசமான அளவு விவாகரத்தில் முடிந்துள்ளது என அறிய நேரும் போது மனம் வலிக்கிறது / அழுகிறது.. இதில் அநேகர் உங்கள் கல்லூரியில் படித்தவர்கள்.இதில் நிச்சயமாக, உறுதியாக உங்களை குறை காண வில்லை.

    இருப்பினும் பாடத் திட்டத்தை கடந்து சிறிது நேரமாவது ஒழுக்க நடைமுறைகளை, வாழ்க்கை நெறிமுறைகளை கற்று தருவதில் தொய்வு உள்ளதோ என்பதில் சற்று அச்சமாக உள்ளது.. மாதா, பிதாவுக்கு அடுத்த ஸ்தானத்தில் உள்ள நீங்கள் முயற்சி செய்தால் நலம் பயக்குமே எனபது தான் எங்கள் ஆதங்கம். மற்றப்படி விதிக்கப்பட்டது தான் நடக்கும் என பொறுமை கொள்ள வேண்டியது தான்.

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.