Saturday, March 2, 2013

கீழக்கரையில் கடல்சார் துறை சார்பாக தேசிய அளவிலான ஒருநாள் கருத்தரங்கம்! !



கீழக்கரையில் கடல்சார் துறை சார்பாக  தேசிய அளவிலான ஒருநாள் கருத்தரங்கம்

கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரியில் கடல்சார் துறை சார்பாக கப்பலை துரிதமாக இயக்கும் முறை பற்றிய தேசிய அளவிலான ஒருநாள் கருத்தரங்கம் நடந்தது.
கல்லூரி முதல்வர் முகம்மது ஜகாபர் தலைமை வகித்தார். கல்லூரி இயக்குநர் ஹபீப் முகம்மது சதக்கத்துல்லா, கொச்சி கடல் சார் ஆராய்ச்சி, தொழில்நுட்பத்துறை இயக்குநர் சைமன் முன்னிலை வகித்த னர். கடல்சார்துறை தலை வர் ராமராஜ் வரவேற்றார்.
கொச்சி கடல்சார் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத்துறை இயக்குநர் சைமன் பேசுகையில், ‘பொறியியல் கடல்சார் துறை படிப்பு முடிந்தவுடன் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு பிரகாசமாக உள்ளது, தமிழ்நாட்டில் உள்ள 9 பொறியியல் கடல்சார்துறை கல்லூரிகளில் முகம்மது சதக் பொறியியல் கல்லூரி மாணவர்கள் அதிகளவில் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். இன்ஜினியர்கள் பேச்சை குறைத்து, செயல்பாடுகளில் அதிக கவனம் செலுத்தி நாடு முன்னேற பாடுபட வேண் டும்’ என்றார்.
இதில் கடல்சார்துறையைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட மாணவர்கள், கடலுக்கு அடியில் படிவங்களாக இருக்கும் மீத்தேன் ஹைட்ரேட்டை கப்பல் எரிபொருளாக பயன்படுத்துவது பற்றி ஆய்வு கட்டுரை சமர்பித்தனர். இதில் மாணவர்கள் பழனிகுமார், ஜான்மேஜர் மற்றும் பிரேம்குமார் ஆகியோர் முதல்பரிசு பெற்றனர். மாணவர் தீபக் நன்றி கூறினார்.
ஏற்பாடுகளை கடல்சார்துறை டீன் விஜயராகவன் மற்றும் மக்கள் தொடர்பாளர் நஜிமுதீன் செய்திருந்தனர்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.