கீழக்கரை ஜின்னா தெருவில் கடந்த 2003 2004 ல் பொதுமக்கள் உபயோகத்திற்காக சொர்ணா ஜெயந்தி திட்டத்தின் கீழ் மகளிர் சுகாதார வளாகம் 3 கழிப்பறையுடன் கட்டப்பட்டு மின்சார மோட்டார் மற்றும் தண்ணீர் வசதியுடன் ஒரு வருடம் மட்டும் செயல்பட்டு வந்தது.ஆனால் அதன் பிறகு சுமார் 7 வருடங்களாக உபயோகமில்லாமம் வீணாகி கிடந்தது இதனையடுத்து அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று தற்போதைய நகராட்சி நிர்வாகம் சுமார் 4லட்சத்து 8 ஆயிரத்து 43 செலவில் கூடுதலாக புதிய கழிப்பறைகள் அமைத்து புதிய கிணறு ஏற்படுத்தவும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டு டெண்டர் விடப்பட்டு தனியார் காண்ட்ராக்டரிடம் இப்பணி ஒப்படைக்கப்பட்டு அப்பணியை அவர் செய்யாமல் பினாமியாக நகராட்சி தலைவர் கணவர் ரிஸ்வான் செய்துள்ளதாகவும் இப்பணியில் பெருமளவு முறைகேடு நடந்திருப்பதாகவும் கவுன்சிலர் முகைதீன் இப்ராகிம் குற்றம் சாட்டி மாவட்ட நிர்வாகம் இப்பணியை மறு ஆய்வு செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது,
புதியதாக 6 கழிப்பறைகள் அமைக்காமல் ஏற்கெனவே இருந்த 3 கழிப்பறைகளை சிறிதளவில் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வெறும் 3 கழிப்பறைகள் மட்டும் அமைக்கப்படுள்ளது.புதியதாக கிணறும் ஏற்படுத்தப்படவில்லை பெயரளவில் இப்பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளது.இது ஒரு மோசடி பணியாகும் இப்பணியை மேற்கொண்டது சேர்மனின் கணவர்தான் இப்பணியை காண்ட்ராக்டர் ஒருவர் தன்பெயரில் எடுத்து சேர்மனின் கணவருக்கு பினாமியாக செயல்பட்டுள்ளார்.மேலும் நகராட்சி பொறியாளரும் எவ்வித ஆய்வும் செய்யாமல் ஒப்புதல் வழங்கி பணம் வழங்கப்பட்டுள்ளது.முன்னதாக புகாரின் அடிப்படையில் அமைச்சர் சுந்தாராஜன் இப்பணியை ஆய்வு செய்யாமல் பில் பாஸ் செய்ய கூட என உத்தரவிட்டது குறிப்பிடதக்கது.எனவே மாவட்ட நிர்வாகம் இப்பணி குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்றார்.
இது குறித்து நகராட்சி தலைவர் ராவியத்துல் கதரியாவிடம் கேட்ட போது,
இது முழுக்க பொய்யான குற்றச்சாட்டு மேலும் இப்பணிகள் நிறைவடைந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்து 2 மாதத்திற்கும் மேலாகி விட்டது.ரூ3 லட்சத்து 49 ஆயிரம்தான் பில் வழங்கப்பட்டுள்ளது.கிணறுக்கு புதியதாக உள்புறம் கூடுதல் உறை அமைக்கப்பட்டுள்ளது.கழிவு நீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.பணியில் எவ்வித குறைபாடுமில்லை.இப்போது திடிரென குற்றஞ்சாட்டுவதின் மர்மம் என்ன? துணை சேர்மனும்,சில கவுன்சிலர்களும் இது போன்ற பொய்யான குற்றசாட்டுக்களுக்கு பிண்ணனியில் உள்ளார்கள்.குறிப்பாக துணை ஹாஜா முகைதீன் நகராட்சிக்கு எதிராக தூண்டி விடுகிறார்.
உவ்வே... மலம் ஜலம் கழிக்கும் இடத்தை கூட புனர் நிர்மாணப் பணியில் கூட ஊலழா? மலத்தைப் போலவே நாறுகிறதே.
ReplyDeleteஅமைச்சர் தலையிட்டப் பின்னும் இந்த அக்கிரம ஊழலுக்கு தீர்வு காணப்பட வில்லை என்றால் இந்தகொடுமையை என்ன வென்று சொல்லுவது?இவர்களின் தைரியத்தை என்ன வெனறு புகழவது?
இறைவா கீழக்கரை நகராட்சியை கலைக்க எப்போது நாடப் போகிறாய்? மக்கள் படும் துயரை எப்போது களையப் போகிறாய்? மக்கள் வரிப்பணமான அமானித பணம் கொள்ளை போவதை தடுக்கும் வல்லமை படைத்த உன்னிடமே பொருப்பு சாட்டுகிறோம்.இது சம்பந்தமாக உன்னால் அருளப்பட்ட வேதத்தில் கூறியதை பரிபூரணமாக மனதில் கொண்டு உன்னிடமே பாதுகாவல் தேடுகிறோம்.
Netrikan thirapinum kutram kutrame.thavaru yar seithalum.kandikapadavendum
ReplyDeleteNetrikan thirapinum kutram kutrame.thavaru yar seithalum.kandikapadavendum
ReplyDeleteகாக்கா அ ....
ReplyDeleteமுகைதின் இபுராஹிம் ஒருவர் சொல்லிவிட்டால் எல்லாம் உண்மையாகி விடாது சேர்மன் உங்க தெரு தானே அவர்களிடம் விசாரணை செய்து விட்டு வந்து இது போன்ற கருத்து பதிவு செய்யுங்க அப்ப தான் உங்களுடைய வயதுக்கு மரியாதையாக இருக்கும் .
முதலில் உங்களின் பெயர் மன்காத்தாவின் தங்கச்சி மகன் என்பதை மாற்றி பதிவு செய்ங்க நினைக்கும் போதே உவ்வே...உவ்வே...என்று வருகிறது யோசிக்காமல் பெயர் பதிவு செய்து விட்டிர்கள் என்று நினைக்கிறன்
முதல்ல உங்களோட பேரை போட்டு அடுத்தவங்களை விமர்ச்சனம் செய்யுங்கள்
Delete