கீழக்கரை மஹ்தூமியா உயர்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு வழியனுப்பு விழா நடைபெற்றது.
பள்ளி தாளாளர் ஹமீது சுல்தான் தலைமை வகித்தார். பழைய குத்பாபள்ளி ஜமாஅத் தலைவர் ஹாஜாமுகைதீன், செயலா ளர் முகம்மது இஸ்மாயில், உதவி செயலாளர் சீனி இபுராகிம், பொருளாளர் ஆரிப், செயற்குழு உறுப்பினர் சித்திக், கல்விக்குழு உறுப்பினர் மூர் ஹசனுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தலைமை ஆசிரியர் கிருஷ்ணவேணி வரவேற்றார். நகராட்சி துணைத் தலைவர் ஹாஜாமுகைதீன் பேசுகையில், மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெறும் மாணவ, மாணவியருக்கு பணப்பரிசு வழங்கப்படும்’ என்றார். பள்ளி மாணவிகளின் கலை நிகழ்ச்சிக்ள் நடைபெற்றது. மஹ்தூமியா தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆனந்தி பிரேமா நன்றி கூறினார்.
மாணவ மாணவிகள் மனதில் இஸ்லாமி நெறிமுறை உக்குவிக்கும் நிகழ்ச்சிகள் நடத்தினால் வருங்கால கீழக்கரை சந்ததிகள் சிறந்த ஆளுமை திறனுடன் வருவார்கள். கல்வி கூடமே சினிமாவை பார்த்து நடனம் ஆடுங்கள் என்று ஊக்குவிப்பது. தவறான முன்மாதிரி இதனை வருங்களாங்களில் மாற்றிக் கொள்வது மூலம் நமது ஊர் இளம் சந்ததிகளை சிறந்தவர்களாக உருவாக்க முடியும்
ReplyDeleteசுல்தான்