கீழக்கரை நகராட்சி தலைவர் ராவியத்துல் கதரியா கூறியதாவது,
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் நந்தகுமாரை கீழக்கரை பிரமுகர்கள் சாதிக் அலி உள்ளிட்ட பலருடன் சந்தித்து கீழக்கரைக்கு தேவையான பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தோம்.
கீழக்கரையில் தனியார் பள்ளிகளுக்கு சொந்தமான விளையாட்டு மைதானங்கள் உள்ளது.அரசு சார்பில் விளையாட்டு மைதானம் இல்லை .இந்நிலையில் கீழக்கரையில் அரசே விளையாட்டு மைதானத்தை அமைக்க வேண்டுமென மாவட்ட கலெக்டர் நந்தகுமாரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.இதனை பரிசீலிப்பதாக கூறிய மாவட்ட ஆட்சியர் இதற்கான இடம் இருந்தால் உடனடியாக செயல்படுத்தலாம் என தெரிவித்தார்.எனவே கீழக்கரை பகுதியில் 2 ஏக்கருக்கும் குறையாத அளவிற்கு இடம் தேர்வு செய்யப்படும்.இதற்கான இடம் இருப்பதாக கண்டறிந்தால் யாரேனும் தகவல் தரலாம்.மேலும் சமுக அக்கறையோடு சமுக அமைப்புகளும்,தனியார் நல அமைப்புகளும் இடம் தர முன் வந்தால் வரவேற்கப்படும்.
கீழக்கரை வர்த்தக சங்கம் சார்பில் நகரில் நகராட்சி சார்பில் நவீன கழிப்பறை வசதி செய்து தர வேண்டுகோள் விடுக்கப்பட்டது.இது குறித்து கு.தா.ஜவுளிக்கடை எதிர்புறமுள்ள வருவாய்த்துறைக்கு சொந்தமான இடத்தில் ஒரு பகுதி ஒதுக்க கேட்கப்பட்டுள்ளது.இத்திட்டமும் விரைவில் செயல்படுத்தபடும்.
கீழக்கரை நகரில் சாலை பகுதிகளில் மின்சார கம்பங்கள் இல்லாத பகுதிகளில் மரக்கன்றுகளை நடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.இதற்காக மாவட்ட நிர்வாகத்தில் மரக்கன்றுகள் கேட்கப்படுள்ளது.விரைவில் செயல்படுத்தப்படும்.
கீழக்கரை நகர் வள்ளல் சீதக்காதி சாலை நெடுஞ்சாலைத்துறை பராமரிப்பில் இருந்து வருகிறது.இச்சாலையை சீரமைக்க கோரி நெடுஞ்சாலைத்துறையிடம் கோரிக்கை விடுத்து இருந்தேன்.
இது குறித்து நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.எனவே விரைவில் இதற்கான பணிகள் துவங்கும்.
முதல்வர் அம்மா அவர்களி நல்லாட்சியில் எப்போதுமில்லாத அளவிற்க்கு கீழக்கரைக்கு பல்வேறு திட்டங்கள் தரப்பட்டு செயல்படுத்தப்படுகிறது.மக்களாகிய உங்கள் ஒத்துழைப்போடு மேலும் பல நல திட்டங்களை செயல்படுத்துவோம் என்றார்.
மறு பதிப்பு
ReplyDeleteமங்காத்தாவின் தங்கச்சி மகன்13 February 2013 5:49 pm
அருமையான நோக்கங்கள். நியாயமானகோரிக்கைகள்.
என்ன செய்வது?
நகரில் தோதான இடமில்லையே
இதனால்தானே மின் கட்டண வசூல் மையம்,பத்திர பதிவு அலுவலகம், பி.எஸ்.என்.எல் அலுவலகம் ஊருக்கு வெளியே அமையப்பட்டு மக்கள் அல்லல் பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.அப்படியே பல் நோக்கு விளையாட்டு மைதானம் அமைக்கக்கூடிய அளவுக்கு ஊருக்கு வெளியே அமைக்கக் கூடிய வாய்ப்பு இருக்குமானால் தற்போது நிலத்தின் மதிப்பு கட்டுபடியாகக் கூடிய நிலையில் இல்லையே. அரசு நிலமும் அறவே கிடையாது.
ஆக இது ஒரு கனா தான்.வருத்தமான விஷயந்தான்