Sunday, March 10, 2013

கீழ‌க்க‌ரை கைராத்துல் ஜ‌லாலியா ப‌ள்ளியின் 129ம் ஆண்டு விழா !



கீழ‌க்க‌ரை கிழ‌க்குத்தெரு கைராத்துல் ஜ‌லாலியா தொட‌க்க‌ப்ப‌ள்ளியின் 129ம் ஆண்டு விழா ப‌ள்ளி வ‌ளாக‌த்தில் ந‌டைபெற்ற‌து.

ப‌ள்ளியின் முன்னாள் தாளாள‌ர் ம‌ஹ்மூது க‌ரீம் த‌லைமை வ‌கித்தார்.கிழ‌க்குத்தெரு ஜ‌மாத் நிர்வாகிக‌ள் க‌ல்வி குழு உறுப்பின‌ர்க‌ள் ம‌ற்றும் கைராத்துல் ஜ‌லாலியா மேல்நிலைப்ப‌ள்ளி தாளாள‌ர் டாக்ட‌ர் ஜ‌குப‌ர் சாதிக் ,தொட‌க்க‌ப்ப‌ள்ளி தாளாள‌ர் செய்ய‌து இப்ராகிம்,திருப்புல்லாணி உத‌வி தொட‌க்க‌ க‌ல்வி அலுவ‌ல‌ர் மீனாட்சி,தொட‌க்க‌ க‌ல்வி அலுவ‌ல‌ர் ராம‌நாத‌ன் ,முன்னிலை வ‌கித்த‌ன‌ர்.

த‌லைமை ஆசிரிய‌ர் சுரேஷ்குமார் வ‌ர‌வேற்றார். உத‌வி த‌லைமை ஆசிரிய‌ர் ச‌சிக‌லா ஆண்ட‌றிக்கையை ச‌ம‌ர்பித்தார்.மாண‌வ‌ர்க‌ளுக்கு ப‌ல்வேறு போட்டிக‌ள் ம‌ற்றும் க‌லை நிக‌ழ்ச்சிக‌ள் ந‌ட‌த்த‌ப்ப‌ட்டு ப‌ரிசுக‌ள் வழ‌ங்க‌ப்ப‌ட்ட‌து.க‌ல்விக்குழு உறுப்பின‌ர் முக‌ம்ம்து சுஹைபு,தொழில‌திப‌ர்க‌ள் நிஜாமுதீன்,ஹாஜா அணீஸ்,கிராம‌ ந‌க‌ர்ம‌ன்ற‌ உறுப்பின‌ர்க‌ள் பாத்திமா,ர‌மேஷ்,சாஹீல் ஹமீது ஆகியோர் மாண‌வ‌ர்க‌ளுக்கு ப‌ரிசு வ‌ழ‌ங்கின‌ர்.உத‌வி ஆசிரிய‌ர் இப்ராகிம்ஷா தொகுத்து வ‌ழ‌ங்கினார்.உத‌வி ஆசிரியை சுசீலா ந‌ன்றி கூறினார்.

 

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.