கீழக்கரையில் அரசு மருத்துவமனை தினவிழா நடைபெற்றது.
கீழக்கரை டி.எஸ்.பி சோமசேகர் தலைமை வகித்து, பராமரிப்பு செய்து முற்றிலும் குளிரூட்டப்பட்ட மருந்தகத்தை திறந்து வைத்தார். பரிசோதனை கூடத்தை நகராட்சி தலைவர் ராவியத்துல் கதரியா தலைமை ஏற்று துவங்கி வைத்தார்.
தமிழக சுகாதார திட்டத்தின் மாவட்ட மேலாண்மை பிரிவு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சாதிக் அலி, நகராட்சி கமிஷ னர் முகம்மது முகைதீன், தலைமை மருத்துவர் ராஜ்மோகன் முன்னிலை வகித்தனர். அரசு சித்தா மருத்துவர் வெங்கட்ராமன் வரவேற்றார். இதில் தூயமுறையில் பொது மக்களிடமும் நோயாளிகளிடமும் கனிவுடன் நடந்து கொண்ட மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மருத்துவர்கள் சாகுல் ஹமீது, முத்தமிழ் அரசி, போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன், நகராட்சி சுகாதார ஆய்வாளர் திண்ணாயிரமூர்த்தி, கவுன்சிலர்கள் அஜ்மல்கான்,முகைதீன் இப்ராகிம், சுரேஷ், சாகுல்ஹமீது, முன்னாள் கவுன்சிலர்கள் ஹமீதுகான், வேல்சாமி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கீழக்கரை அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டு பல்வேறு பரமரிப்பு பணிகள் நடைபெற்று நிறைவுபெற்றுள்ளது.பல்வேறு பரிசோதனைகள் மற்றும் அறுவை சிகிச்சைகள் கீழக்கரை அரசு மருத்துவமனையியே நடைபெறும் என தெரிகிறது.
தமிழக சுகாதார திட்டத்தின் மாவட்ட மேலாண்மை பிரிவு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சாதிக் அலி கூறுகையில் ,
தொற்று இல்லாமல் உருவாகும் நோய் குறித்து கண்டறிய,தமிழகம் முழுவதும் புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. கீழக்கரை அரசு மருத்துவமனையிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
தொற்று இல்லாத நோய்களான சர்க்கரை, ரத்த கொதிப்பு, இருதயம், கர்ப்பவாய் புற்றுநோய், மார்பக புற்றுநோய் மூலம் 30 சதவீதம் பேர் பாதிக்கப்படுகின்றனர். இவர்களுக்கு ஆரம்ப நிலையிலே, தொற்று இல்லா நோய் கண்டறிந்து, சிகிச்சை வழங்கும் புதிய திட்டத்தை அரசு செயல்படுத்தி உள்ளது.இதன் மூலம் இலவசமாக பரிசோதனை செய்து கொள்ளலாம்.
, 30 வயதிற்கு மேற்பட்டோர் வரும் போது, அவர்களுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, கர்ப்ப வாய்ப்புற்று நோய், மார்பக புற்று நோய் குறித்து பரிசோதிக்கப்படும்.
நோய் உள்ளவர்களுக்கு ரத்த பரிசோதனை, இ.சி.ஜி., சோதனை நடத்தப்பட்டு, நோயின் தன்மைக்கேற்ப சிகிச்சை வழங்கப்படும். சர்க்கரை அளவு குறைக்கும் இன்சுலின், ரத்த கொதிப்புக்கான மாத்திரைகள் வழங்கப்படவுள்ளது.
தேவைப்படுபவர்களுக்கு மேல் சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டு, அறுவை சிகிச்சை செய்யப்படும். எந்த பாதிப்பும் இல்லாதவர்களுக்கு, ஆறு மாதத்திற்கு ஒரு முறை சோதனை நடத்தி, கண்காணிக்கப்படும் என்றார்
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.