Wednesday, March 13, 2013

ராம‌நாத‌புர‌ம் மாவ‌ட்ட‌த்தில் மீன்பிடி துறைமுக‌ம்!முத‌ல்வ‌ர் ம‌ற்றும் எம்.எல்.ஏவுக்கு ந‌ன்றி அறிவிப்பு!

photo: the hindu

ராம‌நாத‌புர‌ம் மாவ‌ட்ட‌ம் மூக்கையூரில் மீன்பிடி துறைமுகம் அமைக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

 இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்

நாகை, பழையாறு, பூம்புகார் மற்றும் ராம‌நாத‌புர‌ம் மாவ‌ட்ட‌ம் மூக்கையூரில்  மீன்பிடித்துறைமுகங்கள் அமைக்க உத்தரவிட்டுள்ளார். பூம்புகாரில் ரூ.78 கோடியே 50 லட்ச செலவில் மீன்பிடி துறைமுகம் அமைக்க முதல்வர் நிர்வாக ஒப்புதல் வழங்கியுள்ளதாகவும், துறைமுகம் அமைக்கும் பணிகளை விரைவாக துவக்க, முதல்கட்டமாக ரூ.6 கோடியே 67 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கீழை. இர்பான் வெளியிட்டுள்ள ‌ செய்தியில்,

நீண்ட கால‌மாக‌ இப்ப‌குதி மீனவ ம‌க்க‌ள் உள்ளிட்ட‌ ப‌ல்வேறு த‌ர‌ப்பின‌ரும் மீன்பிடித்துறைமுகம் அமைக்க கோரிக்கை விடுத்து வ‌ந்த‌ன‌ர்.ச‌ட்ட‌ம‌ன்ற‌ கூட்ட‌த்தொடரின் போது ராம‌நாத‌புர‌ம் ச‌ட்ட‌ம‌ன்ற‌ உறுப்பின‌ர் ஜ‌வாஹிருல்லாஹ்வும் மீன்பிடித்துறைமுகம் அமைக்க கோரிக்கை விடுத்திருந்தார்.

கோரிக்கையை ஏற்று த‌ற்போது ராம‌நாத‌புர‌ம் மாவ‌ட்ட‌ம் மூக்கையூரில் மீன்பிடித்துறைமுகம் அமைக்க அனும‌தியும் நிதியும் வ‌ழ‌ங்கி உத்த‌ர‌விட்ட மாண்புமிகு த‌மிழ‌க முத‌ல‌மைச்ச‌ருக்கும்  ராம‌நாத‌புர‌ம் ச‌ட்ட‌ம‌ன்ற‌ உறுப்பின‌ர் ஜ‌வாஹிருல்லாஹ்க்கும் ந‌ன்றியை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவ‌ர் தெரிவித்துள்ளார்.


 

1 comment:

  1. மங்காத்தாவின் தங்கச்சி மகன்March 14, 2013 at 6:09 PM

    மூக்கையூர் என்பது சாயல்குடிக்கு அருகில் உள்ள கடற் பகுதியாகும்..

    அதி சரி, கடந்த ஆட்சியில் சட்ட மன்றத்தில் அறிவிக்கப்பட்ட கீழக்கரை தனித் தாலுகா அறிவிப்பு என்னவாயிற்று?

    அரசுக்கு சொந்தமாக இடம் இல்லாத கீழக்கரையில், ஊர் மக்கள் படும் துயரை துடைக்கும் முகமாக நல்ல எண்ணத்தில் புண்ணியவான்கள் சென்னை சதக்கு அறககட்டளையினர் தானமாக ஐந்து ஏக்கர் நிலத்தை கொடுக்க முன் வந்த நிலையில் தனித் தாலுகா அறிவிப்பு கிடப்பில் இருப்பதின் மர்மம் தான் என்ன?

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.