Tuesday, March 5, 2013

கீழ‌க்க‌ரை -‍ராம‌நாத‌புர‌ம் சாலையில் ப‌ஸ் விப‌த்து!25பேர் காய‌ம்


photo :dinakaran
கீழ‌க்க‌ரை - ‍ராம‌நாத‌புர‌ம் சாலையில் திருப்புல்லாணி அருகே சுற்றுலா பஸ் மற்றும் அரசு பஸ் நேருக்கு நேர் மோதியதில் கீழக்கரை கல்லூரி மாணவிகள் உட்பட 25 பேர் காயமடைந்தனர். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் இருந்து தனியார் சுற்றுலா பஸ்சில் 50 பேர் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்தனர்

.இன்று மதியம் ஒரு மணிக்கு ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட்டு திருச்செந்தூர் சென்று கொண்டு இருந்தனர் .பஸ்சில் 6 குழந்தைகள் உட்பட 50 பேர் இருந்தனர்.அந்தியூரை சேர்ந்த வேலுச்சாமி பஸ்சை ஓட்டி வந்தார்.திருப்புல்லாணி பால்க்கரை அருகே பஸ் வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த அரசு பஸ் நேருக்கு நேர் மோதின.இதில் அரசு பஸ்சில் பயணம் செய்த கல்லூரி மாணவிகள் உட்பட 25 பேர் காயமடைந்தனர்.அந்த வழியாக வந்த வாகனங்களில் ஏற்றி இவர்கள் அனைவரையும் மருத்துவமனைக்கு  கொண்டு சென்றனர்.



அந்த நேரத்தில் மழை பெய்ததால் உடனடியாக மீட்பு பணிகள் செய்ய முடியவில்லை. குறுகலான இட த்தில் பஸ்கள் மோதிக் கொ ண்டதாலும், மீட்பு பணிகள் உடனடியாக செய்ய முடியாததாலும் கிழ க்கு கடற் கரை சாலையில் இருபுறமும் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
டி.எஸ்.பி., முரளிதரன், இன்ஸ்பெக்டர்கள் கணே சன், பரக்கத்துல்லா, எஸ்.ஐ., சாதுரமேஷ் உட் பட போலீசார் மழையில் நனைந்தவாறு மீட்பு பணியில் ஈடுபட்டு, போக்குவரத்தை சரி செய்தனர்.அரசு பஸ் டிரைவர் பட்டுக்கோட்டை முருகையன் தப்பி ஓடினார்.இந்த விபத்து குறித்து ராமநாதபுரம் டவுன் போலீசார் வழ க்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.