Thursday, March 7, 2013

கீழ‌க்க‌ரையில் 100க்கும் மேற்ப‌ட்டோர் ர‌த்ததான‌ம்!



கீழக்கரை ரோட்டரி சங்கம், முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி ரோட்ராக்ட் மற்றும் மதுரை மீனாட்சிமிஷன் மருத்துவமனை இணைந்து நடத்திய ரத்ததான முகாம் முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் அலாவுதீன் தலைமை வகித்தார். மாவட்ட ரோட்டரி சங்க துணை ஆளுநர் டாக்டர் சின்னதுரை அப்துல்லா முகாமை துவக்கி வைத்தார். கல்லூரி விரிவுரையாளர் மரியதாஸ் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் அலாவுதீன் பேசுகையில், ‘ரத்ததானம் செய்வது மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் நன்மை பயக்கும். முன்பின் தெரியாத விலை மதிக்க முடியாத உயிரை காப்பாற்றுவது மனதிற்கு ஒரு ஆத்ம திருப்தி, ரத்ததானம் வழங்குவதால் ரத்தத்தில் புதிய செல்கள் உற்பத்தியாகி உடலுக்கு ஆரோக்கியத்தையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது’ என்றார்.

கீழக்கரை ரோட்டரி சங்க தேர்வு தலைவர் டாக்டர் ராசிக்தீன்,செயலாளர் சுப்ரமணியன், மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை ரத்த வங்கி மேலாளர் ரவி, ரோட்ராக்ட் சங்க மாணவர் தலைவர் தவ்பீக்அலி, செயலர் முஸ்தபா மற்றும் சங்க உறுப்பினர்கள் பேசினர். 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் ரத்ததானம் செய்தனர்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.