Friday, March 1, 2013

+2 தேர்வு துவ‌ங்கிய‌து!கீழ‌க்க‌ரையில் ஏராள‌மான‌ மாண‌வ‌,மாண‌விய‌ர் தேர்வு எழுதின‌ர்!



 தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த 5769 பள்ளிகள் மூலம் 8 லட்சத்து 4 ஆயிரத்து 534 மாணவ, மாணவியர்க‌ளுக்கு இன்று பிளஸ் 2 தேர்வு துவ‌ங்கிய‌து.பள்ளி மாணவ, மாணவியரில் 3 லட்சத்து 73 ஆயிரத்து 788 பேர் மாணவர்கள். 4 லட்சத்து 30 ஆயிரத்து 746 பேர் மாணவியர். மாணவர்களைவிட 56 ஆயிரத்து 958 மாணவியர் இந்த ஆண்டு கூடுதலாக தேர்வு எழுதுகின்றனர். தனித் தேர்வர்களாக 48 ஆயிரத்து 788 பேர் தேர்வு எழுத பதிவு செய்துள்ளனர். தமிழகம் முழுவதும் 2020  தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முறைகேடுகளை தடுக்கவும், தேர்வை கண்காணிக்கவும் 4000 பேர் கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.
10 மணிக்கு தொடங்கி பகல் 1.15 வரை நடைபெற்ற‌து. முதல் 15 நிமிடங்கள் விடைத்தாளில் பதிவு எண்ணை எழுதவும், கேள்வித்தாளை படித்து பார்க்கவும் ஒதுக்கப்பட்டுள்ளது. பின்னர் 10.15 மணிக்கு தேர்வு எழுத தொடங்க வேண்டும். மாணவர்கள் தீவிர சோதனைக்கு பிறகே தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்படுவர். தேர்வு மையங்களில் மின்சார பிரச்னை யை தீர்க்க தட்டுப்பாடு இல்லாமல் மின் சப்ளை செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. இருப்பினும், அனைத்து தேர்வு மையங்களிலும் ஜெனரேட்டர் பொருத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

கீழ‌க்க‌ரையில் உள்ள‌ தேர்வு மைய‌ங்க‌ளில் ஏராள‌மான‌ மாண‌வ‌,மாண‌விக‌ள் +2 தேர்வு எழுதின‌ர்.
 

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.