பல ஆண்டுகளுக்கு முன் கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள நகரங்களின் தேவையை நிறைவேற்றும் வகையில் கடல் நீரை குடிநீராக்கும் நிலையங்களை அமைப்பதற்கு சிறு மற்றும் நடுத்தர நகரங்களுக்கான நகர்ப்புற கட்டமைப்பு வளர்ச்சி திட்டமொன்றை அன்றைய மத்திய அரசு உருவாக்கிய தேசிய குறைந்தபட்ச செயல் திட்டத்தின் கீழ் மத்திய திட்டக் குழுவின் ஆலோசனையின் அடிப்படையில் மத்திய நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகம் இத்திட்டத்தை வகுத்ததாகவும்,இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் ராமநாதபுரம் மாவட்டத்தில் கீழக்கரை மற்றும் ராமநாதபுரம் நகரங்களில் மொத்தம் ரூ. 20.09 கோடி செலவில் கடல்நீரை குடி நீராக்கும் திட்ட முன் வரைவுகள் மாநில அரசிடமிருந்து பெறப்பட்டு இத்திட்டத்திற்கான தொழில்நுட்ப அனுமதியை மத்திய அரசு வழங்கியுள்ள தோடு இதற்கென ரூ. 17.41 கோடி செலவிட அனுமதித்தாக செய்திகள் வெளியானது.
ஆனால் கடல்நீரை குடிநீராக்கும் இத்திட்டம் இன்று வரை கீழக்கரை பகுதியில் செயலபடுத்தவில்லை.இத்திட்டத்தை செயல்படுத்தினால் நகரின் குடிநீர் தேவை முழுமையாக நிறைவேறும் எனவே இத்திட்டத்தை நிறைவேற்ற இப்பகுதியின் மக்கள் பிரதிநிதிகள் இது குறித்து குரல் எழுப்ப வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து சமூக ஆர்வலர் தங்கம் ராதாகிருஸ்ணன் கூறியதாவது,
இன்று வரை கீழக்கரை குடிநீர் ஒரு குடம் ரூ 6க்கு மேல் விற்கப்படுகிறது. லாரி மற்றும் மாட்டுவண்டி மூலம் தனியாரால் நகரில் விநியோகிக்கப்படுகிறது.அரசின் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் கீழக்கரையில் எப்போதாவது நடைபெறும் குடிநீர் விநியோகம் நகரின் குடிநீர் தேவையை முழுமையாக நிறைவேற்றும்படி இல்லை.எனவே கிடப்பில் போடப்பட்ட முந்தைய திட்டமான கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்த இப்பகுதியின் மக்கள் பிரதிநிதிகள் ஜவாஹிருல்லாஹ்.எம்.எல்.ஏ,ரித்தீஷ்.எம்.பி போன்றவர்கள் குரல் எழுப்ப வேண்டும் என்றார்.
செய்தியை கேட்கவே இனிககிறது பாதி தாகம் தீர்ந்தது போல் மனம் நினைக்கிறது
ReplyDelete