Wednesday, March 20, 2013

கீழ‌க்க‌ரையில் அர‌சு சார்பில் மீன் ப‌த‌னிடும் நிலைய‌ம் அமைக்க‌ வேண்டுகோள்




கீழக்கரையில் முற்றிலும் குளிரூட்டப்பட்ட மீன் பதனிடும் நிலையம் அரசு அமைக்க வேண்டும் என்று நீண்ட‌ கால‌மாக‌ இப்ப‌குதி மீனவர்கள் கோரிக்கை விடுத்து வ‌ருகின்ற‌ன‌ர்.இது குறித்து இது வ‌ரை எவ்வித‌ முய‌ற்சியும் எடுக்க‌ப்ப‌ட‌வில்லை என‌ மீன‌வ‌ர்க‌ள் கவ‌லை தெரிவித்த‌ன‌ர்.
கீழக்கரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான காஞ்சிரங்குடி பக் கீர் அப்பா தர்ஹா, மாய குளம் பாரதிநகர், புல்லந்தை மங்களேஸ்வரிநகர் பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் மீன்பிடி தொ ழிலில் ஈடுபட்டுள்ளனர்.

மீன்கள் அதிகளவு பிடி படும் சமயங்களில் வெளி யூர் சென்று கொள்ளளவு அதிகமுள்ள மீன் பதனிடும் நிலையங்களில் மீன்களை பதப்படுத்தி சேமித்து வை க்க வேண்டியுள்ளது.

இதனால் செலவு அதிகமாகி றது. ஏற்கனவே டீசல்  உயர்வு மற்றும் கூலித் தொழிலாளர்கள் சம்பளம் போன்ற பல்வேறு பிரச்னைகளில் மீன்பிடி தொ ழில் நசிந்து வருகிறது. இது போன்ற செலவுகள் அதிகரி க்கும்போது மீன்களை மக்களுக்கு அதிகளவில் விற்பனை செய்ய வேண்டியுள்ளது என மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

 இதுகுறி த்து மீன் தொழிலில் ஈடுபடும் ஹாஜா முகைதீன் கூறுகை யில், ‘கீழக்கரையில் முற்றிலும் குளிரூட்டப்பட்ட மீன் பதனிடும் நிலை யத்தை அரசு அமைக்க வேண்டும் என நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகிறோம்.

இதுவரை எங்கள் கோரி க்கையை பரிசீலனை கூட செய்யவில்லை. நாளொ ன்றுக்கு 2 டன்னுக்கும் அதிகமாக இப்பகுதியில் மீன்கள் பிடிபடுகிறது. இந்த மீன்களை ஏர்வாடி போன்ற வெளியூர்களில் கொண்டு சென்று பதனிட வேண்டியுள்ளது. இதனால் செலவு அதிகமாகிறது. மீன் பதனி டும் நியைத்தை கீழக்கரை யில் அமைத்தால் இங்கேயே பதப்படுத்தி கொள்ளலாம்.
இதனால் பொதுமக்களுக்கும் குறைந்த விலையில் மீன்களை விற்பனை செய்யலாம். எனவே நலிந்து வரும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொ ண்டு கீழக்கரையில் அரசு மீன் பதனிடும் நிலையம் அமைக்க வேண்டும். மேலும் மீனவர்களுக்கு சலுகை விலையில் கட்டணம் விதி க்க வேண் டும். இதன் மூலம் பலருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும். மீன் பிடி தொ ழிலும் வளர்ச்சி பெறும்’ என்றார்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.