கீழக்கரை வடக்குத்தெரு முகைதீனியா நடுநிலைப்பள்ளியில் மாணவர்களின் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
வடக்குத்தெரு ஜமாத் உப தலைவர் ஜாஹிர் ஹுசைன் தலைமையில் துணை செயலாளர் அகமது சகாப்தீன் தலைமை ஆசிரியை சுந்தர தேவி முன்னிலையில் ஜமாத்தின் நிர்வாக சபை உப தலைவர் அகமது மிர்ஷா கண்காட்சியை துவங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் ராக்கெட்,காற்றாலை ,புவி வெப்பமயமாகுதலை தடுத்தல்,மழை நீர் சேமிப்பு,சுற்று சூழல் மாசுப்படுத்துதலை தடுத்துதல்,எரிமலை,பாலைவனம்,தோட்டம் உள்ளிட்ட பல்வேறு இயற்கை வளங்கள் குறித்தும்,அறிவியல் கண்டுபிடிப்புகள் குறித்தும் விளக்கங்களுடன் மாதிரி வடிவங்களை மாணவ,மாணவியர் அமைத்திருந்தனர்.
சின்ன சிறு மாணவ,மாணவியரின் மாதிரி வடிவமைப்புகள் காண்போரை ஆச்சரியப்பட வைத்தது.ஏராளமான பெற்றோர்கள் கலந்து கொண்டு இக்கண்காட்சியை கண்டு களித்தனர்.இது போன்ற கண்காட்சிகள் மாணவ,மாணவியரை ஊக்கப்படுத்துவதுடன் அவர்களின் தனிதிறமையை வெளி கொண்டு வர வாய்ப்பாக அமையும் என பெற்றோர்கள் தெரிவித்தனர்.
மழலையே கண்காட்சி - அதில்
ReplyDeleteமகிழ்வுறும் எக்ஸ்போ உண்டாச்சு
முகைதீன்யா புது நல் முயற்சி அதன்
முன்னேற்ற பாதையில் வளர்ச்சி
விழலுக்கு இறைத்த நீராய் கல்வி
வீணிலே போகாது
குழந்தைகள் தொழில் கற்க
தோதான பயிற்சி