Saturday, March 9, 2013

கீழ‌க்க‌ரை ப‌குதியில் கந்துவ‌ட்டி கும்ப‌ல்!க‌டும் ந‌டவ‌டிக்கை!போலீஸ் எச்ச‌ரிக்கை!


இன்ஸ்பெக்ட‌ர் க‌னேச‌ன்

கீழக்கரை பகுதியில் கந்துவட்டி, கட்டப்பஞ்சாயத்து கும்பல் பிடியில் சிக்கி அப்பாவி மக்கள் தவிக்கின்றனர். மிரட்டி பணம் பறிக்கும் கும்பலை காவல்துறை ஒடுக்கவேண்டும் என்று ச‌மூக‌ ந‌ல‌ ஆர்வ‌ல‌ர்க‌ள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து க‌டும் நடவடிக்கை எடுக்க‌ப்ப‌டும் என‌ காவல்துறை அறிவித்துள்ளது.


கீழ‌க்க‌ரை முஜீப் கூறுகையில்,
க‌ந்து வ‌ட்டிக்கார‌ர்க‌ள்‌ சில‌ க‌டைக‌ள் ம‌ற்றும் த‌னி ந‌ப‌ர்க‌ளுக்கு அதிக‌ வ‌ட்டிக்கு ப‌ண‌ம் தந்து விட்டு தின‌ம் தின‌ம் வ‌ட்டி ப‌ண‌ம் வ‌சூல் செய்கிறார்க‌ள் வ‌ட்டியை க‌ட்டாத ஒவ்வோரு நாளும் ப‌ல‌ ம‌ட‌ங்காக‌ வ‌ட்டி ப‌ண‌ம் பெருகி க‌ட‌ன் தொகை நாளுக்கு நாள் அதிக‌ரிக்கிற‌து. ப‌ல‌ர் வாங்கிய‌ க‌ட‌னை விட‌ ப‌ல‌ ம‌ட‌ங்கு திருப்பி செலுத்தினாலும் க‌ட‌ன் முற்று பெறுவ‌தில்லை இத‌னால் சில‌ர் தொழிலையே விட்டு ம‌ன‌ உளைச்ச‌லில் முட‌ங்குகின்ற‌ன‌ர்.மேலும் வ‌ட்டி ப‌ண‌ம் த‌ராத‌வ‌ர்க‌ளை சாலையில் ஆபாச‌மாக‌ பேசுவ‌திலும்,அடாவ‌டியிலும் சில‌ர் ஈடுப‌ட்டு வ‌ருகின்ற‌ன‌ர்.இதனால் இவ‌ர்க‌ளிட‌ம் வ‌ட்டிக்கு வாங்கி சிறு தொழில் செய்த‌வ‌ர்க‌ள் வ‌ட்டியிலிருந்து மீள் முடியாம‌ல் முட‌ங்கியுள்ள‌ன‌ர்.வ‌ட்டி தொழிலில் ஈடுப‌டுவோர் பெரும்பால‌னோர் வெளியூரை சேர்ந்த‌வ‌ர்க‌ள் ஆனால் உள்ளூரை சேர்ந்த‌ சில‌ விஷ‌மிக‌ள் இவ‌ர்க‌ளுக்கு துணை போகின்ற‌ன‌ர்.


பாதிக்கப்பட்ட தரப்பை சேர்ந்த ஒருவ‌ர் கூறுகையில், சுமார் ரூ2ஆயிர‌ம் வ‌ரை முத‌ல் ரூ1 ல‌ட்ச‌ம் வரை சில‌ க‌டைக‌ளுக்கு வ‌ட்டிக்கு ப‌ண‌ம் த‌ருகிறார்க‌ள்.பின்ன‌ர் மீட்ட‌ர் வ‌ட்டி க‌லெக் ச‌ன் என்ற‌ பெய‌ரில் தின‌ம் தின‌ம் வ‌ட்டியை பெறுகின்ற‌ன‌ர்.ஒரு நாள் தவ‌றினாலும் வ‌ட்டி பெருகி விடுகிற‌து.இத‌னால் க‌ட‌ன் முற்று பெறாமல் வீடு வாச‌ல்க‌ளை அவ‌ர்க‌ளிடமே அட‌கு வைக்க‌ கூடிய‌ சூழ்நிலை உண்டாகிற‌து என்றார்.

கீழக்கரை மக்கள் நல பாதுகாப்பு கழக நிர்வாகி முகைதீன் இப்ராகிம் கூறுகையில்,

கட்டப்பஞ்சாயத்து, கந்துவட்டி கும்பல் ஏதாவதொரு கட்சியின் பின்புலத்துடன் செயல்படுகின்றன. இவர்களது மிரட்டலால் அப்பாவிகள், போலீசாரிடம் பிரச்னையை கொண்டு செல்லவும் முடியாமல் இருதலைக் கொள்ளி எறும்பாய் தவிக்கின்றனர். இக்கும்பல்களை காவல்துறை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்றார்.




கீழக்கரை ஹ‌ச‌னுதீன் கூறுகையில்,

கீழக்கரை நகரில் கந்துவட்டி, கட்டப்பஞ்சாயத்து கும்பல்க‌ள் த‌லைதூக்கும் நிலை உள்ள‌து. வறுமையில் நலிந்த நடுத்தர குடும்பங்களை குறிவைத்து கடன் தருவதாக கந்துவட்டி கும்பலும், சொத்து தகராறு, பணம் கொடுக்கல், வாங்கலில் தகராறு போன்ற விவகாரங்களை தேடிப்பிடித்து பிரச்னையை தீர்ப்பதாக கட்டப்பஞ்சாயத்து கும்பலும் வ‌ல‌ம் வ‌ருகிற‌து.இவ்விரு கும்பலிடம் சிக்கிக் கொண்டு சொத்து, வீடு, அந்தஸ்தை இழந்து பரிதவிக்கும் அப்பாவிகள் எண்ணிக்கை எகிறிக் கொண்டுள்ளது.இதுபோன்ற சமூக விரோதிகளிடம் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும். ஏராளமான சேவை அமைப்புகள் கீழக்கரையில், பொருளாதாரத்தில் நலிந்த மக்களுக்கு வட்டியில்லா கடன் தருகின்றன. மக்கள் அவற்றை பயன்படுத்திக் கொண்டு கந்து வட்டிக்காரர்களை புறக்கணிக்க வேண்டும். எந்த பிரச்னையையும் சட்டரீதியாக அணுகினால் கட்டப்பஞ்சாயத்து செய்பவர்களுக்கு வேலையே இல்லாமல் போய்விடும் என்றார்.

இது குறித்து இன்ஸ்பெக்ட‌ர் க‌னேச‌னிட‌ம் கேட்ட‌ போது,



கந்துவட்டி, கட்டப்பஞ்சாயத்து கும்பலை ஒடுக்க தனிப்பிரிவே உள்ளது. இதுதொடர்பாக எந்த புகாரும் எங்களுக்கு வரவில்லை. பாதிக்கப்பட்டோர், யாருக்கும் அஞ்சத்தேவையில்லை. எங்களிடம் புகார் தரலாம். அவர்களது பெயர் விபரம் ரகசியம் காக்கப்படும். புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.