கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்.னிக் கல்லூரியில் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் நடத்திய தொழில் நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
முதுகுளத்தூர் உதவி காவல்துறை கண்காணிப்பாளர் விக்ரமன்.ஐ.பி.எஸ் தலைமை வகித்து கண்காட்சி மற்றும் கருத்தரங்கை தொடங்கி வைத்தார்.திட்ட ஒருங்கினைப்பாளர் யோசுவா வரவேற்றார்.மதுரை மண்டல வேலை வாய்ப்பு துணை இயக்குநர் பிச்சம்மாள் ஆறுமுகம்,கல்லூரி முதல்வர் அலாவுதீன்,கல்லூர் இயக்குநர் ஹபீப் முஹம்மது சதக்கத்துல்லா,மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ராமலிங்கம்,மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக உதவி இயக்குநர்கள் கலந்து கொண்டு பேசினார்.
முதுகுளத்தூர் உதவி காவல்துறை கண்காணிப்பாளர் விக்ரமன் ஐ.பி.எச் பேசுகையில் ,இந்தியாவை உலகநாடுகளில் தலை நிமிர வைக்க உங்களை போன்ற இளைஞர்கள் தேவை மேலும் மாணவர்களாகிய நீங்கள் ஐ.ஏ.எஸ் ஐ.பி.எஸ் படிப்பதற்கு முன் வர வேண்டும்.நம்மால் முடியுமா என நினைக்க வேண்டாம் நான் படிக்கும் போது பலர் என்னிடம் ஏன் இது உனக்கு தேவையா வேலைகளை விட்டு தேவையில்லாமல் தேர்வு எழுதுகிறாய் எனறு கூறியதுண்டு ஆனாலும் நான் இரண்டு முறை ஐ.பி.எஸ் எழுதி வெற்றி பெற்றேன்.எனவே முயன்றால் முடியாதது இல்லை என மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக பேசினார்.
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.