கீழக்கரை குத்பு செய்யது முகம்மது அப்பா ஒலியுல்லா தர்ஹாவில் கந்தூரி விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையில் குத்பு செய்யது முகம்மது அப்பா தர்ஹா உள்ளது. இங்கு ஆண்டு தோறும் கந்தூரி நிகழ்ச்சி நடைபெறும் இந்தாண்டுக்கான நிகழ்ச்சி கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது.இதில் ஏராளமானோர் பங்கு பெற்றனர்.
முன்னதாக, அப்துல் ஸலாம் ஆலிம் உலக நன்மை மற்றும் ஒற்றுமைக்காக துஆ (பிரார்த்தனை) ஓதி விழாவை துவங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து கொடி ஏற்றப்பட்டது. பின்னர், மவுலீது ஓதப்பட்டது. இதேபோல் 14 நாட்கள் மவுலீது நடைபெறும்.
ஏப். 11ல் கொடி இறக்கப்பட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு நெய் சோறு வழங்கப்படும். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழா கமிட்டிக்குழுவை சேர்ந்த மக்பூல் சுல்தான், ஜலால், ஹாஜா, அபூபக்கர், பாருக், அடுமை உட்பட ஏராளமனோர் செய்திருந்தனர்
இது போன்ற இஸ்லாத்திற்கு எதிரான அனாச்சாரங்களை ஊடகம் மூலமாக நீங்களும் ஊக்குவிக்க வேண்டாம்...
ReplyDeleteஹூசைன்
சவூதி
ஊடகம் என்பது பொதுவான விஷயம் மற்றும் மக்களுக்கு கொடு பதில் என்ன தவறு ,தவறு என்று பார்த்தல் உக்கள் பிழைகளுக்கு மார்க்கம் இல்லாத கல்விகளுக்கு மற்றும் அதிக பணம் முதலிடு செய்வது மற்றும் மார்கத்துக்கு ஒத்து இல்லை ,அந்த கல்வியை ,புத்தம் ,எழுதியவர் ஒரு முஸ்லிம் மார்க்க வலுன்னர் அல்ல ,பேசுவது ,சொலுவது ,எழுத்துவது ,ஒரு சாரார் செய்யும் மக்கள் தொண்டு,முஸ்லிம்மகா இருபது ,முஷ்ரிக்க இருபது அவரவர் கல்விதான் .
ReplyDeleteஇஸ்லாமியக் கொடியேற்றுவது ஒன்றும் அனாச்சாரமல்ல.கொடியே ஏற்றக் கூடாது என்று சொன்னவர்கள் இன்று ஒன்று, நாற்பதாகி, ஊருக்கு ஊர் நாற்பது கொடி ஏற்றிக் கொண்டுள்ளார்கள். ஊரில் நடக்கும் எல்லா செய்திகளையும் தரும் கீழக்கரை டைம்ஸ், இது போன்ற செய்திகளைத் தொடர்ந்து தர வேண்டும் இன்ஷா அல்லாஹ்
ReplyDeleteஇறந்தவர்கள் கபுருல்கொடி எற்றுவது விழாகொன்டாடுவது அனாச்சாரம் என்பது அன்பு நன்பன் ஹமிது ரஹ்மான் அவர்களுக்கு தெரியாதா
Deleteஅல்லாஹ்வின் அருள் கொண்டு இஸ்லாத்தை அகில் உலகமெங்கும் பரப்ப வந்தவர்கள் அவுலியாக்கள். அவ்வாறு வந்தவர்கள் ஏர்வாடி இப்ராஹிம் ஷஹீது வலியுல்லாஹ் அவர்கள். அண்ணலெம் பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களின் திருப்பேரர். பாட்டனாரின் கனவுக் கட்டளையை ஏற்று, மதீனாவிலிருந்து ஏர்வாடி வந்தவர்கள்.
ReplyDeleteஅவர்களோடு வந்தவர்கள் தான் செய்யது முஹம்மது அப்பா அவர்களும். அவர்கள் ஏற்றிய இஸ்லாமியக் கோடி இன்றும் ஏற்றப்படுகின்றது. அவர்கள் ஏற்றிய ஈமானின் சுடர் நம் ஊர் மக்களின் இதயத்தில் உள்ளது. அந்த ஈமானுள்ள மக்களால் கொண்டாடப் படும் இத்தகு சிறப்புறு இஸ்லாமிய விழாக்கள் இன்னும் சிறப்பாக நடக்கட்டும் வரும் நாட்களில் இன்ஷா அல்லாஹ்