Tuesday, March 5, 2013

அபுதாபியில் அய்மான் ச‌ங்க‌ நிக‌ழ்ச்சி!

மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் செயலாளர் கீழ‌க்க‌ரை சையத் ஜாஃபர் நாஞ்சில் ச‌ம்ப‌த்துக்கு பொன்னாடை அணிவித்தார்

அபுதாபி அய்மான் ச‌ங்க‌ம் நடத்திய கல்வி பொருளாதார பேம்பாட்டு கருத்தரங்கம் அரப் உடுப்பி பெண்குயிண்ட் அரங்கில்  நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அய்மான் சங்கத் தலைவர் அதிரை ஏ.ஷாஹுல் ஹமீத் தலைமை வகித்தார்.

சமுதாயப் புரவலர் நோபிள் மரைன் குழுமங்களின் நிர்வாக இயக்குனர் அல்ஹாஜ். ஷாஹுல் ஹமீத் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியின் துவக்கமாக லால்பேட்டை ஹாபிழ். இர்ஷாத் அஹமத் இறைமறை வசனங்கள் ஓதினார். அய்மான் சங்க பொதுச் செயலாளர் காயல் எஸ்.ஏ.சி.ஹமீது அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

உணர்வாய் உன்னை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் தஞ்சை ஜலால், அபுதாபி தமிழ்ச் சங்கத் தலைவர் திரு.ரெஜினால்டு, கவிஞர் கூரியூர் குத்புத்தீன் ஐபக், காதர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தமிழக கல்வி, சமூக பொருளாதார மேம்பாட்டுக் கழகத் தலைவர் அல்ஹாஜ். எஸ்.எம். ஹிதாயத்துல்லாஹ் சிறப்புரையாற்றினார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து சமுதாய மேம்பாடு, பொருளாதார முன்னேற்றம் குறித்து சிறப்பாக விவரித்தார். அய்மான் சங்கம் சார்பில் “அய்மான் கர்ளன் ஹஸனா” (அய்மான் அழகிய கடன் திட்டம்) இந்நிகழ்ச்சியின் மூலம் உருவாக்கப்பட்டது.

 இந்த நிகழ்ச்சியின் மூலம் இத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு செயல்வடிவமும் பெற்றுவிட்டது. நிகழ்ச்சியில் பங்கேற்ற பலரும் இத்திட்டத்தில் தங்களை ஆர்வத்துடன் இணைத்துக் கொண்டு அவர்களின் பங்களிப்பையும் வழங்கி சிறப்பான அடித்தளமிட்டுள்ளனர். இந்நிகழ்ச்சியில் சென்னை, கீழக்கரை, காயல்பட்டினம், லால்பேட்டை, அதிராம்பட்டிணம், ஆடுதுறை, நீடூர், திருவாடுதுறை, நெல்லை, வி.களத்தூர், தேவிபட்டிணம், அழகன்குளம், கொள்ளுமேடு, மானியம் ஆடூர், களமருதூர், ரெட்டியூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களின் ஜமாஅத் பிரதிநிதிகள், இஸ்லாமிய அமைப்புக்களின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர். தமிழகத்தின் தலைசிறந்த சொற்பொழிவாளராகத் திகழும் திரு. நாஞ்சில் சம்பத் (அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர்) திடீர் வருகை தந்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்கள் எஸ்.எ.ஹிதாயத்துல்லாஹ்விற்கு அய்மான் சங்க பொருளாளர் கீழை முஹம்மது ஜமாலுத்தீனும், திரு.நாஞ்சில் சம்பத்திற்கு அய்மான் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் செயலாளர் சையத் ஜாஃபர் ஆகியோர் சால்வை அணிவித்து கவுரவித்தனர். இறுதியாக அய்மான் சங்க செயலாளர் லால்பேட்டை ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை அய்மான் சங்க நிர்வாகிகள் களமருதூர் ஷர்ஃபுத்தீன்,திருவாடுதுறை அன்சாரி பாஷா, மானியம் ஆடூர் குத்புத்தீன் ஹாஜியார், யூஸுஃப் பக்‌ஷ், முஹம்மது ஹாரிஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

25 ஆண்டுக‌ளுக்கும் மேலாக‌  அபுதாபியில் அய்மான் ச‌ங்க‌த்தின் மூல‌ம் ப‌ல்வேறு ச‌முதாய ப‌ணிக‌ளை மேற்கொண்டு இச்ச‌ங்கத்தின் வ‌ளர்ச்சிக்கு பெரும் பங்கு ஆற்றிய‌வ‌ர் இன்றைய‌ அய்மான் க‌ல்லூரியின் துணை த‌லைவ‌ரும் , கீழ‌க்க‌ரை ட‌வுன்  காஜி ஹாஜி காத‌ர் ப‌க்ஸ் ஹுசைன் என்ப‌து நினைவு கூற‌த‌க்க‌து

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.