கீழக்கரை நகராட்சியின் அவசரக்கூட்டம் தலைவர் ராவியத்துல் கதரியா தலைமையில் நடந்தது. கமிஷனர் முகம்மது முகைதீன், துணை தலைவர் ஹாஜா முகைதீன் முன்னிலை வகித்தனர்.
துணைத்தலைவர் ஹாஜா முகைதீன் : கவுன்சிலரை சஸ்பெண்ட் செய்ய, தலைவருக்கு அதிகாரம் இல்லை என நன்கு அறிந்திருந்தும் தலைவர், கவுன்சிலர் முகைதீன் இபுராகிமை சஸ்பெண்ட் செய்து விட்டு கோர்ட்டில் ஆஜராக மக்கள் வரிப்பணத்தை செலவு செய்வது நியாயமில்லை. தலைவரும், நிர்வாக அதிகாரிகளும், தலைவரின் கணவருக்கு, கட்டுப்படுவது போல் நகராட்சியை கேலிக் கூத்தாக்குவது வேடிக்கையானது. முதல்வரின் நல்லாட்சிக்காக வெளிநடப்பு செய்கிறேன் என்று கூறி வெளியேறினார்.
அவருடன் கவுன்சிலர் முகைதீன் இப்ராகிம் உள்ளிட்ட ஐந்து கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். ஒன்பது கவுன்சிலர்களுடன் கவுன்சில் கூட்டம் தொடர்ந்து நடைபெற்றது. keelakaraitimes.com
(வெளிநடப்பு ஏன் என்பது குறித்த துணை சேர்மன் ஹாஜா முகைதீன் அளித்த விளக்கம் கீழே காணலாம்)
கூட்டத்தில், காவிரி நீர் குறித்து சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை, மத்திய அரசிதழில் வெளியிட வைத்த முதல்வர் ஜெ.,வுக்கு நன்றி தெரிவித்தும்,கவுன்சிலர் முகைதீன் இப்ராகிம் சஸ்பெண்ட் குறித்த வழக்கின் வக்கீல் செலவுக்காக ரூ7500 நகராட்சி நிர்வாகம் சார்பில் வழங்குவது, ரூ 5 லட்சத்தில் நகரின் பல்வேறு இடங்களில் குடிநீர் குழாய் அமைப்பது,நகராட்சியின் உரக்கிடங்கில் பிளாஸ்டிக் கழிவுகளை நகராட்சி அனுமதியுடன் அரசு சார்பு விருப்பமுள்ள நிறுவனங்கள் மற்றும் தன்னார்வ மகளிர் குழுக்கள் கட்டணமின்றி எடுத்து செல்ல அனுமதிப்பது, டிப்பர் லாரி பழுது நீக்க ரூ1 லட்சத்து 19ஆயிரத்து ஐநூறு அனுமதிப்பது உள்ளிட்ட ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இது குறித்து கீழக்கரை டைம்ஸ்சுக்கு அளித்த பேட்டியில் நகராட்சி தலைவர் ராவியத்துல் கதரியா கூறியதாவது,
அதிமுகவின் ஆட்சிக்கு எதிராக அதிமுகவின் துணை சேர்மன் ஹாஜா முகைதீன் அவர்கள் வெளிநடப்பு செய்வது ஆச்சரியம் அளிக்கிறது.திமுக துணை சேர்மன் போன்று நடந்து கொள்கிறார்.திமுக கவுன்சிலர்களுடன் இணைந்து செயல்படுகிறார்.அவர் கட்டுப்பாட்டில் நகராட்சி செயல்பட வேண்டுமென நினைக்கிறார்.
அம்மா அவர்களின் நல்லாட்சியில் பல்வேறு நலதிட்டங்களை கீழக்கரையில் செயல்படுத்தி வருகிறோம் அவற்றுக்கு இடையூறு செய்யும் வகையில் துணை சேர்மனின் செயல்பாடு உள்ளது.
எதையாவது குற்றம் சாட்ட வேண்டும் என்று கணவர் தலையீடு என்று சொல்கிறார்.ஏற்கெனவே நடந்த கூட்டத்தில் சொன்னேன் ஏன் கணவரிடம் குறைகளை எடுத்து செல்கிறீர்கள் என்னிடமே சொல்லாமே.மேலும் இது போன்ற குற்றச்சாட்டுக்கு பலமுறை பதில் கூறி விட்டேன்.மேலும்டிப்பர் லாரி மாயம் என்பெதெல்லாம் பொய்.மினி லாரி எங்கும் போகவில்லை பழுது பார்ப்பதற்காக ராமநாதபுரத்தில் உள்ளது.வேண்டுமென்ற நகராட்சியை செயல்படவிடாமல் செய்வதற்காக இது போன்ற பொய்யான குற்றாச்சாட்டுகளை கூறுகிறார்கள் என்றார்.
மினி லாரி ராமநாதபுரத்தில் இருப்பதாக சேர்மன் தரப்பில் வெளியிடப்பட்ட படத்தை காணலாம்
சீச்சீ... என்ன ஒரு மானங் கெட்ட நிர்வாகம்.கருத்துக்களை பதிவதற்கு நமக்கும் அசிங்கமாகவே இருக்கிறது.ஜனநாயக அமைப்பே கேலி கூத்தாகிறது. திருந்தவே மறுக்கும் வெட்கம் கெட்ட செயல்பாடுகள்
ReplyDeleteரொம்ப சரியாச் சொன்னீங்க சார் .......
Deleteஎன்ன்மோ நடக்கிறது.மர்மமாக இருக்கிற்து. ஒன்றுமே புரியவில்லையே
ReplyDeleteபொருள் 5-ல் காணப்படுவது என்ன
நகராட்சியின் டிப்பர் வாகனம் எண்: டி.என்.65 எப் 5067 பராமரிப்பு செய்வதற்கு கோரப்பட்ட ஒப்பந்த புள்ளியில் காரைக்குடி ஏ.ஏ.காட்டேச் இண்டஸ்ட்ரீஸ் ரூ.1,26,000 க்கும், காரைக்குடி எம்.கே.எம். இஞ்ஜினியரிங் இண்டஸ்ட்ரீஸ் ரூ.1,91,500 க்கும் குறிப்பிடப்பட்டுள்ளது.இதில் குறைந்த தொகை குறிப்பிட்ட எம்.கே.எம் க்கு பராமரிப்பு பணி கொடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் சேர்மன் தரப்பில் வெளியிடப்பட்ட நிழல் படத்தில் சம்பந்தப்பட்ட வாகனம் நிறுத்தப்பட்டிருப்பதோ இராமநாதபுரம் பட்டணம் காத்தானில் இருக்கும் ஏ.ஆர்.சர்வீஸ் ஸ்டேஷனில். அது எப்படி?
திருத்தம் ரூ.1,91,500 என்பதை ரூ.1,19,500 என திருத்தி வாசிக்க வேண்டுகிறேன்
ReplyDelete1ST SOLLUKA LORRY YANKA IRUKUNU. MELA ULLA DOCUMENT PADIKUM POTHU KARAKUDI WORKSHOP VARATHU BUT LORRY IRUKU PIC PATHA RAMANATHAPURAM IRUKU.
ReplyDeleteOre kulapama eruku.enna nadakuthunne theriyalai.
ReplyDeleteKilakarayin nagarachiyin seyal padu avvalawhothan
ReplyDelete