Thursday, March 21, 2013

கீழ‌க்கரை கல்லூரியில் புற்றுநோய் தடுப்பு ஆராய்ச்சி மையம் துவக்கம்

மத்திய அரசின் அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி மையத்தின் சார்பில் 26 லட்ச ரூபாயில், கீழக்கரை முகம்மது சதக் இன்ஜினியரிங் கல்லூரியில் புற்று நோய் தடுப்பு மருந்து ஆராய்ச்சி மையம் துவக்க விழா, கல்லூரி முதல்வர் முகம்மது ஜகாபர் தலைமையில் நடந்தது.இயக்குனர் ஹபீப் முகம்மது சதக்கத்துல்லா, முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் அலாவுதீன் முன்னிலை வகித்தனர்.

முகம்மது சதக் அறக்கட்டளை தலைவர் ஹமீது அப்துல் காதர் ஆராய்ச்சி மையத்தை திறந்து வைத்தார்.

வேதியியல் துறை தலைவர் தாவீது ராஜா வரவேற்றார்.கல்லூரி முதல்வர் கூறியதாவது:  

 மாவட்ட அளவில் புற்று நோய் தடுப்பு ஆராய்ச்சி மையம் முகம்மது சதக் இன்ஜினியரிங் கல்லூரியில் முதன் முதலாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. புற ஊதா மற்றும் கண்ணுறு ஒளி நிற மாலை, மாணி மற்றும் பூரியர் அகச் சிவப்பு நிறமாலை ஆகிய புற்று நோய்க்கான ஆராய்ச்சி சாதனங்கள் பொருத்தப்பட்டு, மரபணு பிரிப்பு சோதனைக்கு பயன்படுத்தப்படும். புற்று நோய்க்கு பக்க விளைவற்ற மருந்து கண்டு பிடிக்க முடியும், என்றார். ஏற்பாடுகளை பி.ஆர்.ஓ., நஜ்முதீன், துறை பேராசிரியர்கள் செய்தனர்.
 

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.