கீழக்கரை நகராட்சிக்கு சொந்தமான டிப்பர் லாரி மாயமாகிவிட்டதாக கவுன்சிலர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.இதற்கு சேர்மன் ராவியத்துல் கதரியா மறுப்பு தெரிவித்துள்ளார்.
கீழக்கரை நகராட்சி பகுதியில் தேங்கும் குப்பைகளை சேகரிக்க ரூ.8 லட்சம் மதிப்பில் டிப்பர் மினி லாரி(டி.என்.65&எப். 5067) கடந்த நிர்வாகத்தின் போது வாங்கப்பட்டு பயன்பாட்டில் இருந்தது. லாரி கடந்த 6 மாதங்களாக காணவில்லை எனவும் மாயமான லாரி குறித்து விசாரித்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பதில் தர மறுக்கின்றனர் என கவுன்சிலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து கவுன்சிலர்கள் முகைதீன் இபுராகிம், தங்கராஜ். சாகுல்ஹமீது ஆகியோர் கூறுகையில்,
நகராட்சிக்கு சொந்தமான டிப்பர் லாரி 6 மாதங்களாக காணவில்லை. மாயமான டிப்பர் லாரி குறித்து அதிகாரிகளிடம் கேட்டால் உரிய பதில் இல்லை.
லாரி மாயமான விவகாரத்தில் எங்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. உயரதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மாயமான லாரியை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
இது குறித்து நகராட்சி தலைவர் ராவியத்துல் கதரியா கூறியதாவது,
இது முழுக்க பொய்யான குற்றச்சாட்டு.பழுது பார்ப்பதற்காக ராமநாதபுரம் ஒர்க்சாப்பில் பழுது பார்ப்பதற்காக அனுப்பப்பட்டுள்ளது.ஒரு சில காரணங்களால் கால தாமதமாகி வருகிறது.எனவே டிப்பர் லாரி எங்கும் மாயமாகவில்லை என்றார்.
NO COMMENTS .....
ReplyDelete