Thursday, March 21, 2013

சுகாதார‌ ஆய்வாள‌ர் மிர‌ட்டுவ‌தாக‌ கவுன்சில‌ர் காவ‌ல்துறையில் புகார்!



சுகாதாரச்சீர்கேடுகளை சரி செய்வதற்கு அரசு நிதி ஒதுக்கியும் பணிகளைத் துவக்காமல் இழுத்தடிப்பது குறித்து கலெக்டரிடம் புகார் தெரிவித்ததால் நகராட்சிக் சுகாதார ஆய்வாளர் மிரட்டுவதாக கீழக்கரை கவுன்சிலர் போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார்.



கீழக்கரை நகராட்சியின் 18வது வார்டு கவுன்சிலர் முகைதீன் இப்ராகிம். இவர் பிப். 25ல் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு கலெக்டரிடம் கொடுத்த மனு:


கீழக்கரை ந‌க‌ராட்சியில் உர‌க்கிட‌ங்கு திற‌க்க‌ப்ப‌ட்டது.இங்கு குப்பைக‌ள் கொட்ட‌ப்ப‌ட்டு குப்பைக‌ளை த‌ர‌ம் பிரித்து உர‌மாக்கும் ப‌ணி டெண்ட‌ர் கொடுத்து ந‌டைபெற்று வ‌ந்த‌து.இப்ப‌ணி டிச‌ 31ல் நிறுத்த‌ப்ப‌ட்ட‌து. கடந்த டிச. 31ம் தேதியுடன் ஒப்பந்தம் முடிவு பெற்று பணி நிறுத்தப்பட்டதால் குப்பைகள் மலை போல் குவிந்து உள்ளது. நகராட்சி ஆணையாளரின் அலட்சிய போக்கால் இப்பணிக்கு மறு டெண்டர் வைக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.இது குறித்து ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ கோரியுள்ளார்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கலெக்டரிடம் இவர் அளித்த மற்றொரு மனுவில்,
 “நகராட்சியில் நிலவும் துப்புரவு தொழிலாளர் பற்றாக்குறையால் ஆங்காங்கே குப்பைகள் தேங்கின. சென்னை நகராட்சி ஆணையாளர் ஒப்பந்த தொழிலாளர்களை வைத்து நகரை சுத்தம் செய்வதற்கு ரூ.24 லட்சத்திற்கு நிர்வாக அனுமதி வழங்கி உத்தரவு போட்டு 4 மாதங்கள் ஆகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுகுறித்து கமிஷனரிடம் கேட்டால் சுகாதார ஆய்வாளரிடம் கேளுங்கள் என்றும், சுகாதார ஆய்வாளரிடம் கேட்டால் கமிஷனரிடம் கேளுங்கள் என்றும் பதில் கூறுகின்றனர் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும்,” என்றும் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து கவுன்சிலர் முகைதீன் இபுராகிம் கீழ‌க்க‌ரை போலீசில் கொடுத்த மனுவில்,
“மார்ச் 18ல் நகராட்சி வாசலில் இரவு 7.15 மணியளவில் நானும், கவுன்சிலர்கள் அன்வர் அலி, சாகுல் ஹமீது ஆகியோரும் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது சுகாதார ஆய்வாளர் திண்ணாயிரமூர்த்தி என்னிடம், கலெக்டரிடம் ஏன் மனு கொடுத்தாய் என்று மிரட்டும் விதமாக கையை நீட்டி கடுமையாகப் பேசினார். நகராட்சிக்குள் செல்வதற்கு எனக்கு அச்சமாக உள்ளது. காவல்துறை விசாரணை செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும்,” என்று கூறியுள்ளார்.


இது குறித்து சுகாதார‌ ஆய்வாள‌ர் திண்ணாயிராமூர்த்தியிட‌ம் கேட்ட‌ போது,

இவரின் குற்ற‌ச்சாட்டு முழுக்க‌ முழுக்க‌ உ‌ள்நோக்க‌ம் கொண்ட‌து.உண்மையில்லை.அவ‌ர் ஒரு சான்றித‌ழ் பெறுவது ச‌ம்ப‌ந்த‌மாக‌‌ என்னிட‌ம் வ‌ந்தார்.நான் அர‌சின் விதிமுறைக‌ளுக்கு மாறாக‌ முறையான ஆவ‌ண‌ங்க‌ள் இல்லாம‌ல் சான்றித‌ழ் த‌ர‌ முடியாது என்று ம‌றுத்து விட்டேன்.இதுபோன்ற‌ கார‌ண‌ங்க‌ளால்தான் அவ‌ர் வீண் குற்ற‌ச்சாட்டுக‌ளை கூறுகிறார். கீழ‌க்க‌ரையில் சுகாதார‌ ப‌ணிக‌ள் சிற‌ப்பாக‌ மேற்கொள்ள‌ப்ப‌டுகின்ற‌ன‌.அர‌சாங்க‌த்தில் என‌க்கு தர‌ப்ப‌ட்டுள்ள‌ ப‌ணியினை ச‌ரியாக‌ செய்து வ‌ருகிறேன்.என்றார்.


 

2 comments:

  1. மங்காத்தாவின் தங்கச்சி மகன்March 22, 2013 at 7:55 PM

    வாழ்க்கையில் ஒருவன் எல்லோருக்கும் நல்லவனாக இருக்க முடியாது. அது போல ஒருவன் எல்லோருக்கும் கெட்டவனாக இருக்கக் கூடாது. இது வாழவின் அனுபவ பாடம்.

    சகோதரர் மொய்தீன் இபுறாகீம் தாங்கள் கடந்து வரும் பாதைகளை திருப்பிப் பார்ப்பதை கடமையாக கருத அன்புடன் வேண்டுகிறோம். மன துவேஷங்களை முற்றிலுமாக கலைந்து மக்கள் நலப் பணிகள் செவ்வன நடக்க ஆர்வம் காட்டுங்கள்.

    இருபத்தி ஒரு மக்கள் பிரதிநிதிகளில் தாங்கள் மட்டும் கொக்கரித்து கொண்டு தெரிவது விகாரமாகத் தெரிகிறது. நமது வீட்டு கல்யாணக் காரியங்களில் பார்த்து பார்த்து கவனித்து செய்தாலும் சில குறைகள் வருவதில்லையா? அது போல சகித்துக் கொண்டு அனைவரோடும் ஒத்து போக முயற்சியுங்கள். நிதானித்து செயல் பட முயற்சியுங்கள்.

    காரியம் பெரிதா? வீரியம் பெரிதா? சிந்திக்க வேண்டுகிறோம்.

    பொது வாழ்வில் ஈடுபடும் போது சில சிக்கல்கள், இடர்பாடுகள் வந்தே தீரும். அதனை அனுசரித்து காரியத்தை கொண்டு செல்பவன் தான் கடமை வீரனாவான்

    ReplyDelete
  2. சகோதரர் முர்த்தி அவர்களே பணிகள் சிறப்பாக நடைபெற்றால் மக்களுக்கு மகிழ்ச்சிதான். ஆனால் நீங்கள் பொறுப்பான அதிகாரியாக இருந்தால் உங்கள் மீது குறிப்பிட்டு காட்டியுள்ள குற்றத்துக்கு என்ன அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்பதை ஆதாரத்துடன் மக்கள் முன் ஊடகத்தில் தெரிவியுங்கள். அதற்கு பதிலாக பெண்கள் நொண்டி சாக்கு சொல்வது போல் பேட்டி கொடுக்காதீர்கள். மக்கள் ஏமாளியல்ல.....

    சட்டப்படியும் இந்த கேள்வியை கேட்க முடியும் என்பதும் உங்களுக்கு தெரியும்

    மண்ணின் மைந்தன்
    சுல்தான்

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.