Wednesday, March 27, 2013

கீழக்கரை நகராட்சியில் இலவச கம்ப்யூட்டர் பயிற்சி!


கீழக்கரை நகராட்சியில் இலவச கம்ப்யூட்டர் பயிற்சி மேளா நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்பவர்களுக்கு இன்றும் நாளையும் நகராட்சியில் நேர்காணல் நடைபெறுகிறது.

இதுகுறித்து நகராட்சி கமிஷனர் முகம்மது முகைதீன் கூறியதாவது, ‘சுவர்ண ஜெயந்தி சகாரி ரோஜ்கார் யோஜனா திட்டத்தின் கீழ் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு இலவச கம்ப்யூட்டர் பயிற்சி வழங்கப்படுகிறது, இத்திறன் மேம்பாட்டு பயிற்சியில் சேர விரும்புவோர் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். இதற்கான நேர்காணல் இன்றும் நாளையும் நகராட்சி கூட்டரங்கில் நடக்கிறது.

கம்ப்யூட்டர் பயிற்சி மேளாவில் 18 வயது முதல் 35 வயதிற்கு உட்பட்ட, வறுமைகோட்டிற்கு கீழ் உள்ள குடுபத்தைச் சேர்ந்த 8ம் வகுப்பு தேர்ச்சி, 10, பிளஸ்2 தேர்ச்சி மற்றும் தோல்வி பெற்ற இருபாலரும் பங்கேற்கலாம். பயிற்சியில் கலந்துகொள்ள வருபவர்கள் கல்வி, மதிப்பெண், ஜாதி, சான்றிதழ், வறுமைகோட்டிற்கு கீழ் உள்ள அட்டை நகல், மூன்று பாஸ்போர்ட் சைஸ் போட்டோ கொண்டு வரவேண்டும்’ என்றார்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.