Friday, March 8, 2013

சிறுமியை வீட்டு வேலைக்கு அனுப்பிய‌ தாய்மாமா கைது!


ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடி வடக்குத் தெரு மீரா மொய்தீன், பரிதா தம்பதியினர் துபாயில் பணியாறுகின்றனர்.இவர்களது இரண்டு ஆண், இரண்டு பெண் குழந்தைகளை சகோதரர் ரமலான் அலி பராமரிப்பில் விட்டுச் சென்றனர் இவர்களது 13 வயது மகள் திருப்பாலைக்குடியில் 7ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் சிறுமியின் தாய்மாமா திருப்பாலைக்குடி ரமலான்அலி(32),சிறுமியின் படிப்பை நிறுத்திவிட்டு கீழக்கரையில் உள்ள நைனாமுகம்மது என்ப‌வ‌ர‌து வீட்டில் சிறுமியை வேலைக்கு சேர்த்து விட்டார்

கடந்த சில நாட்களுக்கு முன் கீழ‌க்க‌ரையில் வீட்டை விட்டு வெளியேறி வந்த சிறுமி கீழக்கரையில் கிழக்கு கடற்கரை சாலையில் நின்றுள்ளார்.அப்ப‌குதியை சேர்ந்தோர் சிறுமியிட‌ம் விசாரித்த‌ போது,வேலை செய்த‌ வீட்டில் கொடுமை செய்ய‌ப்ப‌ட்ட‌தாக‌ அப்ப‌குதியை சேர்ந்தோர் சிலரிட‌ம் சிறுமி தெரிவித்துள்ளார் உட‌னே அவரை கீழக்கரை அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். மகளிர் போலீசார் விசாரணை செய்து, ராமநாதபுரத்தில் உள்ள மாவட்ட குழந்தைகள் நலக் குழுமத்தில் ஒப்படைத்தனர். அவர்கள் விசாரணை செய்து ராமநாதபுரத்தில் உள்ள காப்பகத்தில் தங்க வைத்துள்ளனர்.

இதுகுறித்து சிறுமியிட‌ம் கேட்ட‌றிந்த‌ மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் சிவக்குமார் அளித்த புகாரின்பேரில்
 கீழக்கரை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி, சிறுமியை வீட்டு வேலைக்கு அனுப்பிய‌ சிறுமியின் தாய்மாமா திருப்பாலைக்குடி ரமலான்அலி ம‌ற்றும் சிறுமியை கொடுமைப்ப‌டுதிய‌தாக‌  கீழக்கரை  யாசின்தாரா(28) ஆகியோர் மீது குழந்தைகள் பாதுகாப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தார்.இதை தொட‌ர்ந்து. திருப்பால‌க்குடி ரமலான் அலி கைது செய்ய‌ப்ப‌ட்டார்.யாசின்தாராவை போலீசார் தேடி வ‌ருகின்ற‌ன‌ர்.

குழ‌ந்தைக‌ள் ந‌ல‌த்துறை அதிகாரி ஒருவ‌ர் கூறுகையில்,

நாடு முழுவ‌தும் வீட்டு வேலைகள், உணவகங்கள், சாலையோர உணவகங்கள், கட்டுமானத் தொழில்,ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள், தேனீர்க் கடைகள் மற்றும் பிற இடங்களில் 14வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியரை வேலைக்கு அமர்த்துவது த‌டை செய்யப்ப‌ட்டுள்ளது
14 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியரை வேலைக்கு அமர்த்துவது குற்றச் செயலாகும்.

இதுபோல 14 வயதுக்குட்பட்டவர்களை வேலைக்கு அமர்த்துவோர் மீதுசட்டப்படியான நடவடிக்கைக்கு உள்ளாவார்க‌ள்.
இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவோருக்கு ஒரு ஆண்டு சிறைத் தண்டனைஅல்லது ரூ.20,000 அபராதம் அல்லது இவை இரண்டும் சேர்த்து தண்டனைகிடைக்கும்.

 14 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியரை வேலைக்கு அமர்த்துவதுசட்டப்படி குற்றம். அதுபோல செயல்படுபவர்கள் மீது 1986ம் ஆண்டு குழந்தைத்தொழிலாளர் (தடுத்தல் மற்றும் முறைப்படுத்தல்) சட்டத்தின் கீழ் ந‌ட‌வ‌டிக்கைக்கு உட்ப‌டுத்த‌ப்ப‌டுவார்க‌ள் என்றார்.
 

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.