Saturday, March 9, 2013

கீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சியை க‌ண்டித்து மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம் !


கீழக்கரை புதிய பஸ் ஸ்டாண்ட் முன்பு மார்க்சிஸ்ட் சார்பில் கீழக்கரை நகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந் தது. ஆர்ப்பாட்டத்திற்கு வரகுணசேகரன் தலைமை வகித்தார். கீழக்கரை நகராட்சியில் நடைபெறும் முறை கேட்டை மாவட்ட நிர்வா கம் குழு அமைத்து விசா ரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கீழக்கரையில் அதிகரித்து வரும் தொடர் திருட்டுகளை போலீசார் தடுத்து நிறுத்�த வேண்டும் என்பது உள் ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட் டன. மாவட்ட செயற்குழு உறுப்பினர் காசிநாததுரை, தாலுகா செய லாளர் ராஜ்குமார், நகர் செயலாளர் மகாலிங்கம், மாவட்ட குழு உறுப்பினர் கள் கண்ணகி, ரவி, தாலுகா குழு உறுப்பினர் சேகர் பேசினர்.

 

2 comments:

  1. மங்காத்தாவின் தங்கச்சி மகன்March 9, 2013 at 9:28 PM

    இவர்கள், அவர்கள் போற்றும் அம்மாவின் குணம் அறியாமல் ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஒரு நாள் வெகு விரைவில் கீழக்கரை நகராட்சி கலைக்கப்பட்டது என்று பொது மக்களை குளிர வைக்கும் செய்தி வரத்தான் போகிறது.

    அடி மேல் அடி வைத்தால் அம்மியும் நகரும் என்ற சொலவடைக்கு ஏற்ப தார்மீக யுத்தம் தொடங்கிவிட்டது. அன்று கீழக்கரை த.மு.மு.க தீர்மானம். இன்று கீழக்கரை மார்க்சிஸ்ட் கட்சி ஆர்பாட்டம். நாளை ?

    ReplyDelete
    Replies
    1. அடி மேல் அடி வைத்தால் அம்மியே நகரும் என்கிற போது அம்மா (அன்னை) நகரமாட்டான்களா என்ன!

      நகராட்சி துணைத்தலைவர் ஹாஜா அவர்களும் அ.தி.மு.க. அம்மாவுக்கு (அன்னைக்கு) கீழக்கரை நகராட்சியின் போக்கு குறித்து விபரங்கள் அடங்கிய கடிதம் எழுதியிருக்கார். இருவரும் (தலைவரும் / துணைத் தலைவரும்) ஒரே இயக்கத்தைச் சார்ந்தவங்க, எதிர்க் கட்சிக் காரணாவது பொறாமையில் சொல்றானுங்க என்று கட்சி மேலிடம் நினைக்கும்...... ம்ம்ம்ம் ....
      மங்காத்தாவின் தங்கச்சி மகன் சொன்ன மாதிரி வெகு விரைவில் கீழக்கரை நகராட்சி கலைக்கப்பட்டது என்று பொது மக்களை குளிர வைக்கும் செய்தி வந்தாலும் ஆச்சரியப்படுவதர்க்கில்லை......

      Delete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.