Wednesday, March 6, 2013

மாநில‌ அள‌விலான‌ த‌ட‌க‌ள‌ம்!கீழ‌க்க‌ரை க‌ல்லூரி மாண‌வ‌ர்க‌ள் பாசித் ம‌ற்றும் மாத‌வ‌ன் த‌ங்க‌ம் வென்றன‌ர்!மாண‌வி ப‌வித்ரா வெண்க‌ல‌ம் வென்றார்!



ஓசூரில் அதிய‌மான் பொறியிய‌ல் க‌ல்லூரியில் த‌மிழ‌க‌ அள‌விலான‌ பொறியிய‌ல் க‌ல்லூரிக‌ளுக்கு இடையேயான‌ விளையாட்டு போட்டிக‌ள் ந‌டைபெற்ற‌து.

இதில் 156 க‌ல்லூரிக‌ள் ப‌ங்குபெற்ற‌ன‌. இப்போட்டியில் கீழ‌க்க‌ரை ச‌த‌க் க‌ல்லூரி மாண‌வ‌ர் பாசித் நீள‌ம் தாண்டுத‌லில் த‌ங்க‌ப‌த‌க்க‌மும்,900 மீட்ட‌ர் ஓட்ட‌ போட்டியில் மாண‌வ‌ர் மாத‌வ‌ன் த‌ங்க‌ ப‌த‌க்க‌மும்,5 கிலோ மீட்டர் ந‌டைபோட்டியில் மாண‌வி ப‌வித்ரா வெண்க‌லம் வென்றார்.

வெற்றி பெற்ற‌ மாண‌வ‌,மாண‌விய‌ரை க‌ல்லூரி இயக்குந‌ர் ஹ‌பீப் முஹ‌ம்ம‌து ச‌த‌க்க‌த்துல்லா,க‌ல்லூரி முத‌ல்வ‌ர் ஜ‌காப‌ர்,உட‌ற்க‌ல்வி இய‌க்குநர்க‌ள் சுரேஷ்குமார் ,கோவிந்த‌ம்மாள உள்ளிட்டோர் பாராட்டின‌ர்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.