இலங்கையை கண்டித்தும் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வலியுறுத்தியும் கீழக்கரை தனியார் கல்லூரியில் பயிலும் 70க்கு மேற்பட்ட ஐடிஐ மாணவர்கள் நடைபயணம் மேற்கொண்டனர்.இதனையறிந்த கீழக்கரை காவல்துறை டிஎஸ்பி சோமசேகர் தலைமையிலான போலீசார் முள்ளுவாடி அருகே மாணவர்கள் வந்தபோது தடுத்து நிறுத்தி முன் அனுமதி பெறாமல் ரோட்டில் நடைபயணம் மேற்கொள்ளக்கூடாது என தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்
அதேபோன்று கீழக்கரை ஆட்டோ மற்றும் மினிடோர் மற்றும் சீட்கவர் ஓட்டுநர்கள் சங்கம்,உள்ளிட்ட ஏழு சங்கங்களின் ஓட்டுநர்கள் புதிய பஸ் நிலையம் அருகில் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
நண்பர்கள் ஆட்டோ சங்கதலைவர் சேது தலைமை வகித்தார்.மினி டோர் ஓட்டுநர் சங்க செயலாளர் காசிநாதன்,சீட் வேன் ஓட்டுநர் சங்க தலைவர் முனியசாமி சமத்துவ ஆட்டோ ஓட்டுநர் சங்க தலைவர் குமார்,சமத்துவ ஆட்டோ ஓட்டுநர் சங்க தலைவர் குமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
மக்கள் ஜனநாயக கட்சி மாநில அமைப்பு செயலாளர் தர்மலிங்கம் உண்ணாவிரதத்தை துவங்கி வைத்தார். இதில் ஏராளமான ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர்
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.