Sunday, March 17, 2013

கீழ‌க்க‌ரையில் டிரைவ‌ர் கொல்ல‌ப்ப‌ட்ட‌தாக‌ தாய் புகார்!போலீஸ் விசார‌ணை!

photo-Thanks.Nakkeeran.

 கீழ‌க்க‌ரை கிழ‌க்குத்தெருவில் த‌னியாரிட‌ம் கார் ஓட்டுந‌ராக‌ ப‌ணி புரிந்து வ‌ந்தவ‌ர்.லட்சுமிபுரத்தைதைச் சேர்ந்த ஜானகிராமன் என்கிற ராமு (வ‌யது 29).  8வ‌ய‌து சிறுமியிட‌ம் சில்மிஷம் செய்த‌தாக‌ ஏற்பட்ட த‌க‌ராறின் கார‌ண‌மாக‌ த‌ற்கொலை செய்து கொண்டதாக‌ த‌க‌வ‌ல் வெளியான‌து

இதனை மறுத்த ஜானகிராமன் த‌ர‌ப்பின‌ர்  இது கொலை என்றும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட‌வர்களை கைது செய்ய‌ வேண்டுமென‌ கோரின‌ர்.இவரை 18 பேர் கொண்ட கும்பல் அடித்து தூக்கில் தொங்க விட்டதாக, ராமுவின் தாயார் லட்சுமி கீழ‌க்க‌ரை காவ‌ல்துறையில் புகார் கொடுத்துள்ளார்

இந்த சம்பவம் தொடர்பாக 15 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் ஒரு பிரிவினர் போலீஸ் ஸ்டேசன் முன்பு திரண்டனர்.இதனை தொடர்ந்து கீழக்கரை பகுதியில் பதட்டம் ஏற்பட்டது.போலீசார் தீவிர ரோந்தில் ஈடுபட்டனர்.போலீஸ் ஸ்டேசன் முன்பு திரண்டிருந்தவர்களை அங்கிருந்து கிளம்பி செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தினர்.

 ராமுவின்  பெற்றோரோடு போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்களை பிரேத பரிசோதனைக்கு செல்லுமாறு கூறினர்.
இ‌தனை ஏற்றுக்கொண்டு பெற்றோர் அரசு மருத்துவமனைக்கு செல்ல ஒப்புக்கொண்டனர். பிரேத பரிசோதனையில் கொலை என தெரிய‌ வ‌ரும் ப‌ட்ச‌த்தில் ,உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இச்சம்பவம் கீழக்கரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

4 comments:

 1. Intha vishayathuku.entha matham sarpaga theerpu.valangamal.manithapimana adipadayil.thappu seithavaruku.thaguntha thandanai valangumaru en sarpaga ketu kolkiren.by keelai sakotharan

  ReplyDelete

 2. கீழை ஜமீல் முஹம்மது.
  Keelakarai Anjal

  பத்திரிக்கைகளின் தர்மம் இதுதானா??

  நேற்று (16.03.2013) கீழக்கரையில் இரவு ஒரு சம்பவம் நிகழ்ந்து விட்டது. அந்த சம்பவத்தை குறித்து, தன் கற்பனைக் குதிரைகளை ஓட விட்டு, தினமலரும், தினமணியும், நக்கீரனும், மாலை மலரும் பொய்களை உண்மை போல் வர்ணித்து உள்ளது.

  இரவில் சம்பவம் நடந்தது, கொல்லப்பட்டவர் போஸ்ட் மார்ட்டம் செய்யப்படக்கூடவில்லை. ஆனால் அதற்குள் அடித்து கொல்லப்பட்டார், கல்லால் அடித்துக் கொல்லப்பட்டார் என்றெல்லாம் எழுதி தள்ளுகிறார்கள்.

  ஏதும் அறியாத எட்டு வயது சிறுமியிடம் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்று, உண்மையை வெளியில் சொன்னால் கொன்று விடுவேன் என மிரட்டிய‌ இவ‌ரின் தற்கொலையை வேண்டும் என்றே கொலை என திட்டுமிட்டு பரப்பி வருகின்றனர்.
  --------------------------------------------------------------------------------------------------
  கொல்லப்பட்டதாக பத்திரிக்கைகளால் கதை விடப்படும் இந்த சம்பவம் நடைபெற்ற அன்று ஊரில் இருந்து தீர விசாரித்த இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநிலச் செயலாளர் நாச்சியார் கோயில் ஜாபர் அவர்கள் நம்மிடம் சொன்னது.

  8 வயது சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றதை கேள்வியுற்று அதிர்ச்சியுற்ற அச்சிறுமியின் குடும்பத்தினர், இவர் வேலை பார்த்த ஓனர் வீட்டில் புகார் அளித்தனர். காவல்துறையிடம் புகார் கொடுக்கப்பட்டு, அவர்கள் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் விசாரித்து கொண்டு இருக்கும் பொழுதே, போலிஸில் அகப்பட்டால் செத்து விடுவோம் என கருதி அவராகவே தூக்கில் தொங்கியுள்ளார். இதை டிஸிபி அலுவலகத்தில் அவரிடமே நேரடியாக தெரிவிக்கப்பட்டது.

  முஸ்லிம்கள் என்றால் கிள்ளு கீரை என்பதற்கு, மனதால் பாதிக்கப்பட்ட இச்சிறுமியின் வீட்டுக்கு நடுநசியில் சென்று உறங்கி கொண்டு இருந்த இக்குழந்தை,அவளது தாய் (கர்ப்பிணி) மற்றும் முழு குடும்பத்திடம் விடிய விடிய விசாரித்து விட்டு, எந்த ஒன்றும் தெரியாத மன வளர்ச்சி குன்றிய, சரியாக காது கேளாத 53 வயது ஒரு அப்பாவி மனிதனை (சிறுமியின் தாய் மாமா) நைசாக பேசி அழைத்து சென்று அடைத்து வைத்துள்ளது. மிக மிக கண்டிக்கத்தக்கது என்றார்.

  மேலும், பாதிக்கப்பட்ட இச்சிறுமியின் தாய் மற்றும் சகோதரி, மனவளர்ச்சி குன்றிய ஒரு அப்பாவி மற்றும் அடையாளம் தெரியாத 15 பேர்கள் மீது குற்றம் சாட்டி கேஸ்களை பதிவு செய்துள்ளது. கடும் கண்டனத்திற்குரியது.

  மேலும் அவர் கூறுகையில், இக்குழந்தையிடம் தவறாக நடக்க முற்படும் பொழுது அக்குழந்தை மூச்சு திணறி இறந்து இருந்தால்.......?இந்த அநியாயக்காரனை கண்டு பிடித்து இருக்க முடியுமா?

  மானம் மரியாதையோடு அநியாயமாக ஒரு குழந்தையின் உயிர் அல்லவா போய் இருக்கும் என மிகுந்த வேதனையை தெரிவித்தார்.

  நியாயத்தை நியாயமாக செய்யுங்கள்! முஸ்லிம்கள் என்றால் அதற்கு ஒரு சாயம் பூசும் செயலை செய்வதை காவல்துறை நிறுத்த வேண்டும் என்றார்.

  கேவலமான செயலை யார் செய்தாலும் அதை மத சாயம் பூசாமல் சட்டத்தின் முன் தண்டிக்க வேண்டும் என்றார்.

  -கீழை ஜமீல் முஹம்மது.

  ReplyDelete
 3. Ovvoru visayan galilum muslim gal yendral thani yaaga paarkinrargal...

  Ennna kodumai ithu Intha Verubaadu endruthan sariyaagumo theria villai

  ReplyDelete
 4. கீழக்கரையில் உள்ள அனைத்து ஜமாத் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் அவசரமாக செய்ய வேண்டிய விசயம் என்ன வெண்றால் கீழக்கரை வாழ் இந்து மக்களிடம் எந்த தயக்கமும் இல்லாமல் நேரடியாக அவர்களிடம் இஸ்லாத்தை எடுத்துவைக்க வேண்டும். மிகவும் கண்ணியமான முறையில் எடுத்து கூரி. இஸ்லாம் எந்த காலத்திளும் அநியாயத்திற்கு உடைந்தையில்லை என்பதை அழுத்தமாக பதியவைக்க வேண்டும். சங்பரிவர்கள் கீழக்கரை இந்து இளைஞர்களை முளைசலவை செய்து சிறு விசயமானலும் அதை இந்து முஸ்லீம் என்று எதிர்பை உருவாக்கி கலவரத்தை ஏற்படுத்த துடிப்பது கடந்த கலத்தில் இருந்து மிக நன்றாக நம்மால் உணர முடிகிறது.

  கீழக்கரையில் வாழும் அனைவரும் கடந்த கால சொந்தங்கள் இறை நம்பிக்கை அடிப்படையில் இன்று வழிபடும் முறையில் வேறுபட்டுள்ளேம்.
  மற்ற அனைத்திலும் நாம் சகோதரர்கள் நண்பர்கள் இதில் எந்த அரசியலும் இல்லை. நம்மை பிரித்து லாபம் காண துடிக்கும் அரசியல் சாக்கடைகளிடம் இருந்து நாம் மீளவேண்டும். இந்து சகோதரனுக்கு அநியாயம் நடந்தால் பார்த்து மகிழ்பவன் இஸ்லாமியன் இல்லை. முஸ்லீம் சகோதரனுக்கு அநியாயம் நடந்தால் பார்த்து மகிழ்பவன் இந்து இல்லை.
  எந்த சம்பவமானலும் தயவு செய்து மதரிதியில் பார்காமல் நியாயத்துக்கு பின்னால் கீழக்கரை மக்கள் திரள வேண்டும். அவ்வாறு செய்தால் எந்த அயோக்கியனும் தண்டனையிளிருந்து தப்பிக்க முடியாது.

  --- சுல்தான்

  ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.