எஸ்.பி மயில் வாகனன்
கீழக்கரையை சேர்ந்தோரிடம் 500 பவுன் நகை மோசடியில் ஈடுபட்டதாக ராமநாதபுரம் எஸ்.பி மயில் வாகனன் உத்தரவின் பேரில் ராமநாதபுரம் தம்பதியினர் கைது செய்யப்பட்டனர்!
இதை நம்பி கீழக்கரையைச் சேர்ந்த முகம்மது அலி ஜின்னா மனைவி உம்முல் ஹைரா என்பவர் தன்னிடம் இருந்த 60 பவுன் நகை மற்றும் 30க்கும் மேற்பட்ட கீழக்கரையைச் சேர்ந்த பெண்கள் உள்ளிட்டவர்கள் சுமார் 500 பவுன் நகையை அடகு வைத்துள்ளனர். குலாம் மற்றும் இவரது மனைவி சீனியம்மாள். இருவரும் போலி பில் தயாரித்து அதன் மூலம் 50 பைசா வட்டியில் நகை அடகு வாங்குவதாக கூறி தேவைப்படுபவர்களுக்கு பணத்தை கொடுத்துள்ளனர்.
இந்நிலையில், உம்முல் ஹைரா உள்ளிட்ட பெண்கள் அடகு நகையை திரும்ப பெற கேட்டுள்ளனர். அதற்கு குலாம் தம்பதியினர் நகையை திருப்பி தராமல் காலம் தாழ்த்தி தலைமறைவானார்கள்.
இதையடுத்து கீழக்கரை காவல் நிலையத்தில் நகையை இழந்த பெண்கள் சென்ற வாரம் புகாரளிக்க வந்தனர். இந்நிலையில் உம்முல் ஹைரா ராமநாதபுரம் எஸ்.பி., மயில்வாகணனிடம் புகாரளித்தார்.புகாரை பெற்ற எஸ்.பி மயில்வாகனன் உத்தரவுபடி குலாம், சீனியம்மாள் இருவரையும் கைது செய்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஆரம்ப கட்ட விசாரணையில் 100 பவுனுக்கு மேல் நகை மோசடி செய்யப்பட்டிருக்கலாம் என்ற நிலையில் தற்போது 500 பவுன் நகை மோசடி செய்யப்பட்டிருப்பதாக தெரிய வந்தது அதிர்ச்சியளிப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.