கல்வி, வேலைவாய்ப்பில் சிறுபான் மை முஸ்லிம்களுக்கு 10 சத வீத இடஒதுக்கீடு மத்திய அரசு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ராமநாதபுரத்தில் இந்திய யூனியன் முஸ் லிம் லீக் சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆர்பாட் டம் நடந்தது.
இந்நிலையில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் ராமநாதபுரம் அரசு போக்குவரத்துக் கழக பணி மனை முன்பு நடந்த ஆர்ப்பாட்ட பேரணிக்கு சிராஜூ தீன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் வருசைமுகம்மது, மாவட்ட செய லாளர் ஷாஜகான், நகர் செ யலாளர் சாதுல்லாகான், கடலாடி ஒன்றிய அமைப் பாளர் அப்துல்லத்தீப், மாவட்ட துணை செயலாளர்கள் முகம்மதுயாகூப், லியாக்கத்அலி, மற்றும் சீனிமுகம்மது பேசினர்.
நீதியரசர் ரங்கநாத் மிஸ் ரா ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று கல்வி, வே லைவாய்ப்பில் சிறுபான் மை முஸ்லீம்களுக்கு 10% இட ஒதுக்கீடு மத் திய அரசு வழங்க வேண்டும். தமிழகத்தில் முஸ்லீம் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரு க்கு நடைமுறையில் உள்ள 3.5% இடஒதுக்கீட்டை 7 % தமிழக அரசு உயர்த்த வேண்டும்.
மக்களின் பண்பட்ட கலாச்சரத்தை வாழ்வாதாரத்தையும் பெருமளவு பாதி த்து வரும் மதுவை ஒழிக் கும் வகையில் பூரண மதுவிலக்கு மத்திய, மாநில அரசு அமுல்படுத்த வேண் டும். விசாரணை கைதி களாக நீண்டகாலமாக பல் வேறு மாநிலங்களில் சிறை யில் அடைபட்டுள்ள அப் பாவி முஸ்லீம் கைதிகளை மத்திய, மாநில அரசுகள் விடுவிக்க வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
கீழக்கரை நகர் இளைஞ ரணி மற்றும் மாணவரணி அமைப் பாளர் எஸ்.ஏ. முஹம்மது அஃப்ரோஸ் கான் உள்ளிட்ட ஏராளமானோர் கீழக்கரையிலிருந்து ராமநாதபுரம் சென்று ஆர்ப்பாட்டத்தில் பங்கு பெற்றனர்.
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.