Wednesday, April 24, 2013

ஏர்வாடி த‌ர்காவில் 2 வ‌ய‌து குழ‌ந்தை க‌ட‌த்த‌ல்!க‌ண்காணிப்பு கேமரா மூல‌ம் க‌ட‌த்திய‌வரை அடையாள‌ம் காண‌ முய‌ற்சி!



ஏர்வாடி தர்காவில் தங்கியிருந்த சிறுவனை கடத்தி சென்றதாக மர்ம வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

ராமநாதபுர‌ம் மாவ‌ட்ட‌ம் கீழக்கரை அருகே உள்ள ஏர்வாடி தர்காவில்‌ தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் இங்கு வந்து தங்கியிருந்து செல்கிறார்கள்.

இவ்வாறு திண்டுக்கல் மாவட்டம் பள்ளபட்டி அருகே உள்ள அரவாய் குறிச்சி பகுதியை சேர்ந்த இபுராகிம் மூசா என்பவரது மனைவி யாஸ்மின் சஜினா(வயது 20) உட‌ல்நிலை ச‌ரியில்லாத‌ தனது 2 வயது மகன் முகம்மது யாசினுடன் த‌ர்காவில் த‌ங்கி இருந்தால் குண‌ம‌டையும் என்ற‌ அவ‌ரின் ந‌ம்பிக்கையின் பேரில் க‌டந்த 9.1.2013 முதல் ஏர்வாடி தர்கா வளாகத்தில் தங்கியிருந்து வருகிறார்.இவரது கணவர் இபுராகிம் மூசா அந்தமானில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் யாஸ்மின் சஜினா தங்கியிருந்த பகுதியில் வாலிபர் ஒருவர் முகமது யாசினுடன் நன்றாக பழகி விளையாடி வந்தாராம். இதன் காரணமாக அவர் மீது நம்பிக்கை ஏற்பட்டு சிறு வனை வைத்திருக்க அனுமதித்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 19-ந் தேதி யாஸ்மின் சஜினா தனது மகனுக்கு பால் வாங்கு வதற்காக அந்த வாலிபரிடம் சிறுவனை விட்டு விட்டு சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து திரும்பி வந்து பார்த்த போது மகனையும், அந்த வாலிபரையும் காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த யாஸ்மின் சஜினா கதறி அழுது பல்வேறு இடங்களில் மகனை தேடியும் கிடைக்கவில்லை. சிறுவனை மர்ம வாலிபர் கடத்தி சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது
.
இதுகுறித்து யாஸ்மின் சஜினா ஏர்வாடி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் கணேசன், சப் -இன்ஸ்பெக்டர் மகேசுவரி, ஏட்டு சண்முகவேல் ஆகி யோர் வழக்கு பதிந்து தீவிர விசாரணை நடத்தி வருகின் றனர். யாஸ்மின் சஜினா தங் கியிருந்த இடத்தில் இருந்த நபர் மலையாளம் கலந்த தமிழ் மொழியில் பேசியதால் அவர் கேரளாவை சேர்ந்தவராக இருக்கலாம் என்று கருதப்படு கிறது. அவரது செல்போன் எண்ணை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் அவர் மங்களூரை சேர்ந்த ஒரு நபருடன் அடிக்கடி பேசியிருப் பது தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து தனிப் படை போலீசார் மங்களூர் விரைந்துள்ளனர்.

மேலும் தர்கா வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமிரா மூலம் போலீசார் வாலிபரை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள் ளனர். ஏர்வாடி தர்காவில் தங் கியிருந்த சிறுவன் மர்ம மான முறையில் கடத்தப்பட்டுள்ள தால் அவனை நரபலி கொடுப் பதற்காக கடத்தி சென் றார் களா? அல்லது வேறு ஏதாவது காரணத்துக்காக கடத்தி செல் லப்பட்டுள்ளாரா? என்பது தெரியவில்லை. மேலும் அந்த மர்ம வாலிபர் தர்காவில் தங்கியிருந்த போது பிச்சை எடுத்து சாப்பிட்டுள்ளார். இதனால் சிறுவனை பிச்சை எடுக்க வைப்பதற்காக கடத்தி செல்லப்பட்டானா? போன்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்
 

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.