Tuesday, April 16, 2013

சின்ன‌ஞ்சிறு வ‌ய‌தில் சிறுசேமிப்பில் அச‌த்திய‌ ப‌ள்ளி குழ‌ந்தைக‌ளுக்கு ப‌ரிசு!


கீழ‌க்க‌ரை இஸ்லாமியா தொட‌க்க‌ப்ப‌ள்ளியி சின்ன‌ஞ்சிறு
பால‌ர்க‌ளுக்கு சிறு சேமிப்பு ப‌ழ‌க்க‌த்தை ஊக்க‌ப்ப‌டுத்தும் வித‌மாக‌ 2012 ஜீன் முத‌ல் 2013 மார்ச் வ‌ரை ஒரே வ‌ருட‌த்தில் ரூ 2 ஆயிர‌த்திற்கும் மேலாக‌ சிறு சேமிப்பில் சாதித்த‌ 49 பேர்க‌ளுக்கு ப‌ள்ளியின் சார்பாக‌ வ‌ழ‌ங்கும் விழா ந‌டைபெற்ற‌து.

ப‌ள்ளியில் ப‌யிலும் 350 குழ‌ந்தைக‌ளுக்கும் சிறு வ‌ய‌திலேயே  சிறு சேமிப்பு ப‌ழ‌க்க‌த்தை ஊக்க‌ப்ப‌டுத்தும் வித‌மாக‌ அனைத்து குழ‌ந்தைக‌ளு சிறு சிறு சேமிப்புக‌ளாக‌ சேர்த்து பாண்டிய‌ன் வ‌ங்கியில் ச‌ஞ்சாயிகா திட்ட‌த்தில் ப‌ள்ளியின் மூல‌மாக‌ ப‌ண‌த்தை சேமித்து வ‌ந்த‌ன‌ர்.

இந்நிலையில் இக்குழ‌ந்தைக‌ளை மேலும் அதிக‌மாக‌ ஊக்க‌ப்ப‌டுத்தும் விதமாக‌ அதிக‌ தொகை சேர்த்த‌ குழ‌ந்தைக‌ளுக்கு முத‌ல் மூன்று ப‌ரிசுக‌ளும் 46 பேர்க‌ளுக்கு ஆறுத‌ல் ப‌ரிசுக‌ளும் வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்ட‌து.

முன்னாள் க‌வுன்சில‌ர் எம்.எம்.கே ஜ‌மால் துரை தலைமை வ‌கித்து ப‌ரிசுக‌ளை வ‌ழ‌ங்கினார்.இஸ்லாமியா மெட்ரிக் ப‌ள்ளி முத‌ல்வ‌ர் மேப‌ல் ஜ‌ஸ்ட‌ஸ்,மெட்ரிக் தொட‌க்க‌ப்ப‌ள்ளி த‌லைமை ஆசிரிய‌ர் ஜொச‌ப் சார்த்தோ,ஆசிரியர் தாஹா ரசூல் முன்னிலை வ‌கித்தார். த‌லைமை ஆசிரியை த‌ன‌ ல‌ட்சுமி வர‌வேற்றார்.

இதில் இர‌ண்டாம் வ‌குப்பு மாண‌வி த‌ஸ்னீம் பேக‌ம் ரூ 13 ஆயிரத்து 100 சேமித்து முத‌ல் ப‌ரிசு பெற்றார்.இவ‌ரை ப‌ள்ளியின் தாளாள‌ர் எம்.எம்.கே முகைதீன் இப்ராகிம் பாராட்டினார்.ஆசிரியை ல‌த்திபா பேக‌ம் ந‌ன்றி கூறினார்.ஏற்பாடுக‌ளை பள்ளியின் நிர்வாக‌ இயக்குந‌ர் ம‌லைச்சாமி ம‌ற்றும் ஆசிரிய‌ர்க‌ள் செய்திருந்த‌ன‌ர்.
 

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.