டாக்டர் சின்னத்துரை அப்துல்லா
சென்னை அப்பல்லோ குழந்தைகள் மருத்துவமனை மற்றும் ரோட்டரி சங்கம் இணைந்து ராமநாதபுரத்தில் ஏப்.28ல் குழந்தைகளுக்கான இலவச இருதய சிகிச்சை முகாம் நடத்துகிறது என ரோட்டரிசங்க துணை ஆளுனர் டாக்டர் சின்னத்துரை அப்துல்லா தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் தெரிவித்தாவது:
பதினாறு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இருதயம் சம்பந்தப்பட்ட நோய்களை கண்டறிந்து அவர்களுக்கு இலவச சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைகளை ரோட்டரி சங்கம் மற்றும் அப்பல்லோ மருத்துவமனை மாநிலம் முழுவதும் நடத்தி வருகிறது.
ரோட்டரி சங்க ஆளுநர் மேஜர்டோனர் ஷாஜகான் முயற்சியில் இந்த முகாம் நடத்தப்படும். முகாம் ராமநாதபுரம் மாவட்ட மக்கள் பயனடையும் வகையில் வரும் ஏப்.28 ஞாயிற்றுக்கிழமை ராமநாதபுரம செய்யது அம் மாள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை நடைபெறுகிறது.
மூச்சுத்திணறல், குறைவான உணவு உட்கொள்ளுதல், அதிகப்படியாக வியர்த்தல், உடல் எடை அதிகரிக்காமல் இருத்தல், குழந்தையின் மேனி நீலநிறமாதல், நடுக்கம், நினைவு இழத்தல் போன்றவை இருதய நோய்க்கான அறிகுறியாகும்.
இந்த குறைபாடு உள்ள குழந்தைகள் அல்லது ஏற்கனவே இருதய சிகிச்சைக் காக மருத்துவர்களால் பரிந் துரை செய்யப்பட்டு வசதியில்லாமல் தவிக்கும் ஏழை எளிய குழந்தைகளும் முகாமில் பங்கேற்று பயனடையலாம். பரிசோதனை அனைத்தும் இலவசமாக வழங்கப்படும். முகாமில் கலந்துகொள்ள வரும் குழந்தைகள் தங்களது பழைய மருத்துவ அறிக்கைகள் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் காப்பீடு திட்டத்தில் பதிவு பெற்றிருந்தாலோ அதற்கான முழு அறிக்கையும் எடுத்து வரவேண்டும்.
இது குறித்த விபரங்களை மேலும் அறிய தங்கள் ஊரில் உள்ள ரோட்டரி சங்க உறுப்பினர்களை தொடர்பு கொள்ளலாம். மேலும விபரம் அறிந்துகொள்ள, ரோட்டரி துணை ஆளுனர் டாக்டர் சின்னத்துரைஅப்துல்லா. 98424 21334, டாக்டர் கோதண்டராமன் ,94431 20286,. ரமேஷ்பாபு. 94425 21964., சண்முகராஜேஸ்வரன். 94433 31561., களஞ்சியம். 94434 42519, சாதிக்அலி 94433 31672., ஆசாத் எஸ்.எஸ். ஹமீது. 89252 27966, சுப்பிரமணியன் 94438 60560 ஆகியோரை தொடர்புகொண்டு விபரம் அறிந்துகொள்ளலாம் என அவர் தெரிவித்தார்.

No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.