கீழக்கரை அருகே உள்ள வேளானூர் கருங்கதாஸ்(சென்ட்ரிங் தொழிலாளி) செல்வராணி தம்பதியரின் குழந்தையான முனீஸ்பிரியா(1),கடந்த ஏப் 14ல் மூச்சு திணறல் மற்றும் சளி தொந்தரவு இருப்பதாக கீழக்கரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தது. இந்நிலையில் இக்குழந்தைக்கு முதல் பிறந்த நாள் ஏப்ரல் 19ல் வருவதால் வீடு சென்று திரும்புகிறோம் என பெற்றோர்கள் தெரிவித்தனர்.
குழந்தைக்கு நோய் முழுமையாக குணமடையததால் வீட்டுக்கு
செல்ல வேண்டாம் என அறிவுறுத்திய மருத்துவர்கள் அதே சமயம் குழந்தையின் பிறந்தநாளை மருத்துவமனையிலேயே கொண்டாடலாம் என யோசனை தெரிவித்தனர் அதன்படி கீழக்கரை தலைமை அரசு மருத்துவர் ராஜ்மோகன் தலைமையில் டாக்டர்கள் சாஹீல் ஹமீது,ஜவாஹிர் ஹீசைன்,முத்தமிழ் அரசி, சித்தா டாக்டர் வெங்கட் ராமன் முன்னிலையில் கேக் வெட்டி சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இது குறித்து குழந்தையின் பெற்றோர்கள் கூறியதாவது,குழந்தையின் உடல்நலக்குறைவால் மிகுந்த கவலையிலும் மேலும் குழந்தையின் பிறந்த நாளன்று மருத்துவமனையிலேயே இருக்க நேரிடுகிறதே என்ற வருத்தத்துடன் இருந்த எங்களுக்கு மன ஆறுதல் அளிக்கும் வகையில் எங்கள் குழந்தையின் முதல் பிறந்த மருத்துவமனையில் கொண்டாட அனுமதி தந்த மருத்துவர்களுக்கும் நிர்வாகத்தினருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.என்றனர்.
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.