கீழக்கரை நகராட்சி உரக்கிடங்கை பல லட்சம் செலவில் மேம்படுத்தும் பணிகள் !நகராட்சி தலைவர் பார்வையிட்டு ஆய்வு!
கீழக்கரை நகராட்சி குப்பைகளை கொட்டுவதற்கு இடம் ஏற்படுத்தப்பட்டு உரக்கிடங்காக செயல்பட்டு வருகிறது.இதை மேம்படுத்தும் விதமாக இங்கு பல லட்சம் மதிப்பீட்டில் உள்புற சாலை அமைத்தல்,மழை நீர் வடிகால் கால்வாய் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இவற்றை கீழக்கரை நகராட்சி தலைவர் ராவியத்துல் கதரியா நேரில் சென்று பார்வையிட்டார்.
மேலும் அவர் கூறியதாவது,
கீழக்கரை நகராட்சிக்கு கழிவு நீர் உறிஞ்சும் லாரி,குடிநீர் பைப்கள் இல்லாத இடங்களில் குடிநீர் சப்ளை செய்வதற்கு குடி நீர் லாரி,குப்பைகளை அகற்ற டம்பர் பிளேசர் லாரி ஆகியவை புதியதாக வாங்கப்பட்டுள்ளது.இவை அனைத்தும் அடுத்த வாரம் பயன்பாட்டுக்கு வருகிறது என்றார்.
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.