குழந்தையை கடத்திய அப்துல் நசீர் கைது செய்யப்பட்டு 15 நாள் காவலில் வைக்கும்படி குற்றவியல் நடுவர் உத்தரவிட்டார்.
ஏர்வாடி தர்காவில் கடத்தப்பட்ட ஒன்றே முக்கால் வயது ஆண் குழந்தையை கர்நாடகத்தில் போலீஸார் மீட்டு, கடத்திய இளைஞரையும் கைது செய்து, இன்று(வியாழக்கிழமை) நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தினர்.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள ஏர்வாடி தர்காவில் தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் இங்கு வந்து தங்கியிருந்து செல்கிறார்கள்.
இவ்வாறு திண்டுக்கல் மாவட்டம் பள்ளபட்டி அருகே உள்ள அரவாய் குறிச்சி பகுதியை சேர்ந்த இபுராகிம் மூசா என்பவரது மனைவி யாஸ்மின் சஜினா(வயது 20) உடல்நிலை சரியில்லாத தனது 2 வயது மகன் முகம்மது யாசினுடன் தர்காவில் தங்கி இருந்தால் குணமடையும் என்ற அவரின் நம்பிக்கையின் பேரில் கடந்த 9.1.2013 முதல் ஏர்வாடி தர்கா வளாகத்தில் தங்கியிருந்து வருகிறார்.இவரது கணவர் இபுராகிம் மூசா அந்தமானில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் யாஸ்மின் சஜினா தங்கியிருந்த பகுதியில் வாலிபர் ஒருவர் முகமது யாசினுடன் நன்றாக பழகி விளையாடி வந்தாராம். இதன் காரணமாக அவர் மீது நம்பிக்கை ஏற்பட்டு சிறு வனை வைத்திருக்க அனுமதித்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 19-ந் தேதி யாஸ்மின் சஜினா தனது மகனுக்கு பால் வாங்கு வதற்காக அந்த வாலிபரிடம் சிறுவனை விட்டு விட்டு சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து திரும்பி வந்து பார்த்த போது மகனையும், அந்த வாலிபரையும் காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த யாஸ்மின் சஜினா கதறி அழுது பல்வேறு இடங்களில் மகனை தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து ஏர்வாடி தர்கா காவல் நிலையத்தில் யாசின் ஜபினா புகார் செய்தார். கடத்தப்பட்ட குழந்தையையும், கடத்திய நபரையும் கண்டு பிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயி்லவாகனன் உத்தரவில் ஆய்வாளர் கணேசன், சார்பு ஆய்வாளர்கள் ஜேசு தாஸ், மகேஸ்வரி, கணேசன் ஆகியோ்ர அடங்கிய தனி போலீஸ் படையை உதவி காவல் கண்காணி்ப்பாளர் விக்ரமன் நியமித்தார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது,
இதி்ல் கர்நாடக மாநிலம், சக்தபுரத்தைச் சேர்ந்த முகம்மது மகன அப்துல் நசீர் (22) என்ற இளைஞர் சுமார் ஒரு வாரமாகத் தங்கி இருந்தார் என்பதும் அவர்தான் அந்த குழந்தையுடன் பழகியதும் தெரிய வந்தது, குழந்தை காணாமல்போன நாள் முதல் இந்த இளைஞரையும் காணவில்லை என்பதும் தெரியவந்தது. மேலும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ஏர்வாடி ஹக்தார் நிர்வாகி ஒருவருக்கு குழந்தையை தரவேண்டுமானால் ரூ5 லட்சம் வேண்டும் எனவும் இல்லையென்றால் கொலை செய்து விடுவதாகவும் போன் வந்துள்ளது.மங்களூரிலிருந்து போன் பேசியது தெரிய வந்ததால் கர்நாடகம் சென்ற தனி போலீஸ் படையினர், குழந்தை கடத்தல்காரன் அப்துல் நசீரை அவனது சொந்த ஊரில் பதுங்கி இரு்நத போது நேற்று(புதன் கிழமை) கண்டுபிடித்து விசாரித்த போது குழந்தை காணாமல் போய் விட்டதாக கூறியுள்ளான்.
பின்னர் அங்குள்ள காவல் துறை மூலம் விசாரணை செய்ததில் குழந்தை ஒன்று அனாதையாக நின்றதால் அப்பகுதி மக்கள் குழந்தை காப்பகத்தில் சேர்த்துள்ளனர். பின்னர் தாய் மூலம் குழந்தை அடையாளம் காணப்பட்டு குழந்தைமுகம்மது யாசினையும் மீட்டனர்.
குழந்தையை கடத்திய அப்துல் நசீர் கைது செய்யப்பட்டு 15 நாள் காவலில் வைக்கும்படி குற்றவியல் நடுவர் உத்தரவிட்டார்.குழந்தையை பணத்திற்காகத்தான் கடத்தினாரா,பிச்சை எடுக்க வைக்கப்படுவதற்காக கடத்தப்பட்டதா,பிண்ணியில் வேறு யாரும் உள்ளனரா என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.குழந்தை கடத்தப்பட்ட 6 நாள்களில் குழந்தையை மீட்டு, கடத்தல்காரனையும் கைது செய்த தனி போலீஸ் படையினரை காவல் கண்காணிப்பாளர், உதவி காவல் கண்காணிப்பாளர், மற்றும் தர்கா நிர்வாகத்தினர், பொது மக்கள் ஆகியோர் பாராட்டினர்
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.