Saturday, April 6, 2013

கீழக்க‌ரையில் க‌ட‌ல்நீரை ந‌ன்னீர‌க்கும் திட்ட‌ம் ம‌ற்றும் பாதாள‌ சாக்க‌டை திட்ட‌ம் நிறைவேற்ற‌ ஜ‌வாஹிருல்லா.எம்.எல்.ஏ வ‌லியுறுத்த‌ல்!



ராமநாதபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜவாருல்லா நிருபர்களிடம் கூறியதாவது:
 201314ம் நிதி யாண்டுக்கான நிதி நிலை அறிக்கை கூட்டத்தொடரில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, சமூக நலன் மற்றும் சத்துணவு  திட்டத்துறை ஆகியவற்றின் மானி யக்கோரிக்கையின் போது கீழக்கரை நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்தை இந்த நிதியாண்டில் தொடங்க வேண்டும் என்றும், மாவட் டத்தில் உள்ள 4 நகராட்சி களில் காலியாக உள்ள துப்பு ரவு பணியாளர் பணியிடங் களை உடனே நிரப்ப வேண் டும் என்று வலியுறுத்தி உள் ளேன்.

இதேபோல ராமேசுவரம் அக்னி தீர்த்த கடற்கரையில் நிலவும் அசுத்தங்களை அப் புறப்படுத்தி தூய்மையாக பராமரிக்க வேண்டும். ராம நாதபுரத்தில் பாதாள சாக்க டையை விரைவில் பயன் பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். அனைத்து சாலை களையும் சீரமைக்க வேண் டும்.

 ராமநாதபுரம் நகரை ஒட் டியுள்ள பட்டணம் காத்தான், சக்கரக்கோட்டை ஆகிய ஊராட்சிகளுக்கும் பாதாள சாக்கடை திட்டத்தை விரிவு படுத்த வேண்டும். குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். கீழக்கரை யில் கடல் நீரை நன்னீராக் கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

மண்டபம் யூனியன் பெருங்குளம் ஊராட்சியில் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து தண்ணீர் தொட்டி வரை உள்ள 15 கிலோ மீட் டர் சாலையையும், திருப்புல் லாணி யூனியன் கோரைக்குட் டம் கிராம சாலையையும், நொச்சியூரணி பால்குளம் சாலையையும், கீழக்கரை நெடுஞ்சாலையில் இருந்து காஞ்சிரங்குடி கிராமத்திற் கான சாலையையும், பாம்பன் தெற்குவாடி முதல் முந்தல் முனை வரையுள்ள சாலை யையும் செப்பனிட நடவ டிக்கை எடுக்க வேண்டும்.

சத்துணவு ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட கால முறை ஊதியமும், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ஓய்வூதியமும் வழங்க வேண்டும். தொண்டி பேரூராட்சியில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய கிழக்கு தொடக்கப்பள்ளி வளாகத்திலேயே சத்ததுணவு சமையல் கூடம் அமைக்க வேண்டும். தேர்தலின் போது பூத் சிலிப் வழங்கும் பணியில் ஈடுபட்ட சத்துணவு பணியாளர்களுக்கு இது வரை படித்தொகை வழங்கப் படவில்லை. அதனை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நடவடிக்கை

இதேபோல சமூக பொருளாதார சாதிவாரி கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்ட சத் துணவு ஊழியர்களுக்கு அதற் கான படித்தொகை ஓராண் டாகியும் வழங்கப்படாமல் உள்ளது. இதனை உடனடி யாக வழங்க வேண்டும். மாவட்டத்தில் பல யூனியன் அலுவலகங்களில் சத்துணவு ஊழியர்களுக்கு பணி பதிவே டுகள் பராமரிக்கப்படாமல் உள்ளது. 2010ம் ஆண்டு முதல் சத்துணவு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படா மல் உள்ளது. இந்த குறை களை உடனடியாக போக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

4 comments:

  1. மங்காத்தாவின் தங்கச்சி மகன்April 6, 2013 at 7:28 PM

    இராமநாதபுரம் சட்ட மன்ற பிரதிநிதி சகோதரர் ஜனாப் ஜவாஹிருல்லா அவர்களின் கனிவான் பார்வைக்கு கீழக்கரை டைம்ஸின் வாயிலாக:

    தற்சமயம் நடை பெற்றுக் கொண்டிருக்கும் சட்ட மன்ற கூட்டத் தொடரில் வருவாய் துறை மானிய கோரிக்கையின் போது, கிடப்பில் கிடக்கும் கீழக்கரை தனி தாலுகா உருவாக்க திட்டத்தை வலியுறுத்தி அரசின் பதிலை பெற வேண்டுகிறோம்.

    ReplyDelete
  2. மங்காத்தாவின் தங்கச்சி மகன்April 6, 2013 at 7:57 PM

    இராமநாதபுரம் - கீழக்கரை நெடுஞ்சாலையில் உள்ள ரயில்வே கிராஸிங்கில் ஏற்படும் அடிக்கடி தொடர் அடைப்பால் பொது மக்கள் படும் துன்பங்களை விளக்க வார்த்தை இல்லை. குறிப்பாக இருதய தாகுதலுக்கு ஆளானவர்கள், பிரசவ வலியால் துடிக்கும் பெண்கள்,108 மற்றும் மருத்துவ அவசர ஊர்திகள்..

    பணி முடிந்து நீணடகாலமாகியும் சிற்சில குறைகளை தவிர வராமல் இருக்கும் பட்டணம் காத்தான் - ஆர்.எஸ். மடை குறுக்குச் சாலை பயன் பாட்டிற்கு வருமானால் இன்னல்கள் அனைத்தும் தீருமே. சாமி வரம் கொடுத்தும் பூசாரி வரம் கொடுக்காத கதையாக நெடுஞ் சலை துறையினரின் செயல் பாடு உள்ளது.

    இந்த சட்ட மன்ற தொடரிலேயே ஜனாப் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. அவர்கள் சம்பந்தப்பட்ட மானிய கோரிக்கையின் போது தீர்வு காண முயற்சித்து மக்களின் துயரை நீங்க வேண்டுகிறோம்.

    ReplyDelete
  3. நல்ல பல திட்டங்களை கூரும் நீங்கள் குறைந்த பட்சம் உங்கள் பெயரையாவது தெரிவிக்கவேண்டும்

    மங்காத்தாவின் தங்கச்சி மகன். உங்க பெரிய உம்மா பெயர் மங்காதாவா? இந்த விசயம் உங்க உம்மாவுக்கு தெரியுமா

    ---சுல்தான்

    ReplyDelete
  4. நல்ல பல திட்டங்களை கூரும் நீங்கள் குறைந்த பட்சம் உங்கள் பெயரையாவது தெரிவிக்கவேண்டும்

    மங்காத்தாவின் தங்கச்சி மகன். உங்க பெரிய உம்மா பெயர் மங்காதாவா? இந்த விசயம் உங்க உம்மாவுக்கு தெரியுமா

    சுல்தான்

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.