கீழக்கரையில் பல மாதங்களாக டெங்கு மற்றும் மர்மகாய்ச்சலால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவது தொடர்ந்து கொண்டிருக்கிறது காய்ச்சல் பாதிக்கப்பட்டு இதுவரை சில மாதங்களில் 4 பேர் உயிரழந்துள்ளனர். சமீபத்தில் கீழக்கரையை சேர்ந்த இளம்பெண் ஒருவர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரழந்தார்.மேலும் தற்போது 10க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ராமநாதபுரம் மற்றும் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து சமூக நல் ஆர்வலர் முகைதீன் கூறுகையில்,
சுகாதாரத்துறையும் கீழக்கரை நகராட்சியும் இணைந்து நடவடிக்கைகளை முடுக்கி விட வேண்டும்.உயிரழப்பு ஏற்பட்டதும் சுகாதாரத்துறையினர் இரண்டு நாட்கள் மட்டும்உடனடி நடவடிக்கைகள் எடுக்கின்றனர்.பின்னர் நடவடிக்கை மந்தமாகி விடுகிறது.
கீழக்கரை நகரில் சிறப்பு மருத்துவ முகாம்களை அமைத்து டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிர ப்படுத்த வேண்டும்.பரவி வரும் காய்ச்சலை கட்டுப்படுத்த வேண்டும் இது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவற்கு உண்டான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் டெங்கு இல்லவே இல்லை என்ற கருத்தை வலியுறுத்த சுகாதாரத்துறை எடுக்கும் முயற்சிகளை விட்டு விட்டு நோய் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து கீழக்கரை மக்களின் அச்சத்தை போக்க வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.