கீழக்கரையில் பள்ளி அருகே தாழ்வாகச் செல் லும் மின் கம்பியின் விபரீ தம் உணர்ந்து மின்வாரி யம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கீழக்கரையில் பல்வேறு இடங்களில் மிகவும் தாழ்வாக செல்கிறது.இதனால் ஆபத்து விளையும் ஆபத்துள்ளது.குறிப்பாக கீழக்கரை தெற்கு தெரு இஸ்லாமிய பள்ளியின் பின்புற வாசல் அருகே செதுல்லும் மின் கம்பி தாழ்வாக செய்கிறது. ஆறு அடி உயரத்தில் உள்ள மின் கம்பியை மனிதர்களின் தலையை உரசி செல்லும் நிலையில் உள் ளது. பள்ளி குழந்தைகள் வாசல் படியில் நின்று கையை உயர்த்தினால் விபத்து அபாயம் நிலவுகிறது. இதுகுறித்து மின்வாரியத்திற்கு பலமுறை புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கையில்லை.
இது குறித்து சமூக ஆர்வலர் முஸ்தபா கூறுகையில்,
இஸ்லாமிய பள்ளி குழந்தைகள் அப்பகுதி வீடுகளிலுள்ள குழந்தைகள் வீட்டு வாசற்படியில் நின்று குதித்து விளையாடுகின்றனர்.
எதிர்பாராவிதமாக மின்கம்பியில் கை உரசினால் பெரிய விபரீதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் தாழ்வாக செல்லும் மின் கம்பியை உயர்த்த ராமநாதபுரம் மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் துரித நடவடிக்கை எடுக்க பணியாளர்களுக்கு உத்தரவிடவேண்டும்.கீழக்கரை நகரில் பல்வேறு இடங்களில் இது போன்ற நிலை உள்ளது. என்றார்.
பெரும்பாலான தெருக்களின் நிலை இதுதானே!
ReplyDelete