கீழக்கரை நகருக்குள் வரும் பேருந்துகள் பழைய காவல் நிலையம் அருகே உள்ள நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றி செல்வது வழக்கம் இந்நிலையில் ஒரு சில பேருந்துகள் சாலையின் நடுவே நிறுத்தி பயணிகளை ஏற்றுவதால் போக்குவரத்து இடையூறு ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.
இது குறித்து செய்யது இப்ராகிம் என்பவர் கூறுகையில் ,
கீழக்கரை பழைய காவல் நிலைய அருகே ஆட்டோ நிறுத்தம் உள்ளது அதன் அருகே பஸ் நிறுத்துவதற்கு இடம் உள்ளது அங்கே பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றாலாம்.ஆனால் பேருந்து ஓட்டுநர்கள் புதிய பேருந்து நிலையம் செல்லும் வளைவில் சாலையின் நடுவே பேருந்தை நிறுத்தி பயணிகளை ஏற்றுவதால் பெரும் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறேன் என்றார்.
கீழக்கரை முஜீப் கூறுகையில்
கீழக்கரை நெடுஞ்சாலையில் சாலையோரம் வாகனங்கள் மாதக்கணக்கில் நிறுத்தப்படுகிறது.இதனால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது.சில நாட்களுக்கு முன் மெயின் ரோட்டில் தனியார் பள்ளியின் தாளாளர் ஒருவர் தனது வாகனத்தை ஓரமாக நிறுத்தி கடைக்குள் சென்று திரும்புவதற்குள் அவ்வழியே வந்த போலீஸ் டிஎஸ்பி தாளாளரிடம் கடுமையான் வார்த்தையில் வாகனத்தை எடுக்க சொன்னார் இதனால் தாளாளருக்கும் டிஎஸ்பிக்கு நேரடி வாக்குவாதம் ஏற்பட்டது.இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது பின்னர் சமரசம் செய்யப்பட்டு போக்குவரத்து சீராகியது.
சிறிது நேரம் வாகனத்தை நிறுத்தி கடைகளுக்கு செல்லும் தனி நபர்களிடம் சட்டத்தை கடுமையான முறையில் பிரயோகிக்கும் காவல்துறை வாகனங்கள் நிறுத்த தடை செய்யப்பட்ட பகுதியில் வாகனங்கள் நிறுத்தமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.குறிப்பாக வள்ளல் சீதக்காதி சாலை,அஞ்சலக வீதி ஆகியவற்றில் மிகவும் அதிகளவில் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன இதனால் பொது மக்கள் நடு ரோட்டில் நடந்து செல்லும் சூழ்நிலைதான் உள்ளது.என்றார்
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.