உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் கண்ணன் தலைமையிலான உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மாரிஸ்வரன்,கருணாநிதி,மோகனராஜ்,செல்லப்பாண்டி,கர்ணன், ஆகியோர் அடங்கிய குழு இன்று காலை கீழக்கரை கடைகளில் திடீர் ஆய்வு செய்து டீக்கடைகளில் பயன்படுத்தும் தேயிலை ,ஓட்டல் மற்றும் டீக்கடைகளில் பயன்படுத்தும் குடிதண்ணீர் ஆகியவைகளை பரிசோதனைக்காக எடுத்து கொண்டனர்.குடீநீர் பாட்டில்களை சோதனை செய்த போது அரசு அனுமதியின்றி பாட்டில்கள் விற்பனை செய்தது தெரிய வந்தது.உடனடியாக பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இது குறித்து கா.செ.சுல்தான் என்பவர் கூறுகையில்,
கீழக்கரையில் இந்த ஆய்வு வரவேறக்கதக்கது.வள்ளல் சீதக்காதி சாலை மட்டுமின்றி அனைத்து தெருக்களில் உள்ள கடைகளிலும் சோதனை செய்ய வேண்டும்.காலவதியான பொருட்களை விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.