முஹம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் பயிலும் மூன்றாம் ஆண்டு மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் சார்பாக இலவச மடி கணினி(லேப்டாப்)வழங்கும் விழா நடைபெற்றது.
கல்லூரி இயக்குநர் ஹபீப் முஹம்மது சதக்கத்துல்லா தலைமை வகித்தார்.கைத்தறி மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் சுந்தர்ராஜன்,மாவட்ட அதிமுக செயலாளர் முனியசாமி,கீழக்கரை நகராட்சி தலைவர் ராவியத்துல் கதரியா, கீழக்கரை நகராட்சி துணை தலைவர் ஹாஜா முகைதீன்,ஒன்றிய துணை செயலாளர் செல்வகுமார்,புல் லந்தை கழக செயலாளர் பாக்கியநாதன்,மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ஹரிதாஸ்,போகலூர் யூனியன் தலைவர் நாகநாதன் முன்னிலை வகித்தனர்.
கல்லூரி முதல்வர் அலாவுதீன் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் 742 மாணவ,மாணவியர்களுக்கு லேப்டாப் வழங்கப்பட்டது.துறை தலைவர் மரியதாஸ் நன்றி கூறினார்.இதில் நகர் அதிமுக நிர்வாகிகள் இம்பாலா சுல்தான்,சரவண பாலாஜி,நாராயணன்,கவுன்சிலர்கள் செய்யது கருணை,சுரேஷ் உள்பட உள்பட ஏராளமான பேராசிரியர்கள்,துறை தலைவர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.