Tuesday, April 23, 2013

ராம‌நாத‌புர‌ம் ச‌ர‌க‌ புதிய‌ டிஐஜியாக‌ பாஸ்கர‌ன் பொறுப்பேற்றார் !


Thanks.Dinakaran daily news
 
ராமநாதபுரம் டி.ஐ. ஜி.யாக இருந்த ராமசுப்பிர மணி ஐ.ஜி.யாக பதவி உய ர்வு பெற்று திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டார்.

சென்னை போக்குவரத்து துணை கமிஷனராக இருந்த பாஸ்கரன் டி.ஐ.ஜி., யாக பதவி உயர்வு பெற்று ராமநாதபுரத்திற்கு மாற்றப்பட்டார். அவர் நேற்று ராமநாதபுரம் டி.ஐ.ஜி.,யாக பொறுப்பேற்றார். இதற்கு முன் சென்னை போக்குவர த்து கமிஷனர், பரங்கி மலை துணை கமிஷனர், சேலம் துணை கமிஷனர், திருவா ரூர் மாவட்ட எஸ்.பி., ஆக அவர் பணியாற்றி உள்ளார். 1990&1991ல் ராமநாதபுரம் டி.எஸ்.பி.,யாகவும், பின்னர் ராமநாதபுரம் க்யூ பிராஞ்ச் டி.எஸ்.பி.,யாகவும் பணி யாற்றி உள்ளார்.

டி.ஐ.ஜி. பாஸ்கரன் செ ய்தியாளர்களிடம் கூறுகை யில், �சட்டம் ஒழுங்கை சிற ப்பாக பராமரிக்கும் பொரு ட்டு பதற்றமான இடங்களில் சுமூகமான சூழ்நிலை ஏற்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைக ளும் எடுக்கப்படும்.

இலங்கை சிறையில் உள்ள ராமே ஸ்வரம் மீனவர்களை விடு விக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக மீனவர்கள் சட்டம் ஒழுங்கு பிரச்னையில் ஈடுபடாமல் இருக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். வழிப்பறி, பெண்களிடம் நகை பறிப்பு போன்றவற்றை தடுக்க பழைய குற்றவாளிகளை கணக்கெடுத்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

ராமநாதபுரம், சிவகங் கை மாவட்டங்களில் சட்டம் ஒழுங்கு பிரச்னை, போலீஸ் தொடர்பான நடவடிக்கைகளுக்கு என்னை பொதுமக்கள் எந்த நேரமும் தொடர்பு கொள்ளலாம்� என்றார்.  பேட்டி

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.