கீழக்கரை கிழக்குத்தெருவை சேர்ந்தவர் முத்து இப்ராகிம் மகன் சித்திமரைக்கா(22) தொழில் நுட்ப இன்ஜினியரிங் படித்துள்ளார் இவரின் புகைப்படத்தை பயன்படுத்தி பேஸ்புக்கில் நண்பர்களுக்கு ஆபாச குறுந்தகவல்கள்,புகைப்படம் ,அவதூறு கருத்துக்கள் அனுப்ப்பட்டுள்ளது.
இதனால் ஒரு வருடமாக சித்திமரைக்கா பல்வேறு அவதூறுகளுக்கு ஆளாகி மிகுந்த மன உளைச்சலுக்கு தள்ளப்பட்டார்.இது குறித்து கீழக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.இது குறித்து வழக்கு பதிவு செய்து பேஸ்புக் கணக்கினையும் அந்த தகவல் யார் மூலம் அனுப்பபடுகிறது எனபதனையும் சைபர் கிரைம் மூலம் விசாரணை செய்தனர்.
விசாரணையில் முடிவில் போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது,
கீழக்கரையை சேர்ந்த ராசித் என்பவர் சித்தி மரைக்காவின் புகைப்படத்தை பயன்படுத்தி தவறான தகவல்களை அனுப்பியது தெரிய வந்தது.அவர் கைது செய்யப்பட்டார்.நண்பர்களான இருவரும் தங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பழிவாங்கும் நடவடிக்கையாக இச்செயலில் ஈடுபட்டதாக ராசித் தெரிவித்ததாக போலீஸ் தரப்பு தெரிவிக்கிறது.
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.