கீழக்கரையில் ஆய்வு பணிகளுடன் பாதாள சாக்கடை திட்டம்
பல்லாண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. திட்ட மதிப்பீடு தயார் செய்து விரைவில் திட்டப்பணிகளை துவக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கீழக்கரையில் 21 வார்டுகள் உள்ளன. இங்கு 300க்கும் மேற்பட்ட சந்துக்கள் உள்ளன. சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்ப்பட்டோர்
வசித்து வருகின்றனர். மிக குறுகிய தெருக்களில் ஏராளமான அடுக்குமாடி வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இவற்றில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல் கடலில் கலக்கின்றன. இதனால், கடலின் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படுகிறது. பல இடங்களில் கழிவுநீர் வெளியேற வழியின்றி தேங்கி நிற்கிறது. கீழக்கரையில் பெரும்பாலான இடங்களில் திறந்தவெளி சாக்கடையாக இருப்பதால் சுகாதார கேடு ஏற்படுகிறது.தற்போது வாய்கால்களில் மூடி அமைக்கப்படுவதால் ஓரளவுக்கு சுகாதாரம் பேணப்படுகிறது ஆனாலும் மழை காலங்களில் மழைநீரும், கழிவுநீரும் கலந்து தெருக்களில் வழிந்தோடுகிறது. இதனால், நோய்கள் உருவாகி பல்வேறுபொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
கீழக்கரையில் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் பல்லாண்டு காலமாக வலியுறுத்தி வருகின்றனர்.
அப்போதைய கீழக்கரை நகராட்சி தலைவர் பஷீர்அகம்மது, முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலன் முயற்சியால் பாதாள சாக்கடை திட்டம் துவங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. முதற்கட்டமாக பாதாள சாக்கடை திட்டத்திற்கான ஆய்வுப்பணிகள் அப்போது நடைபெற்றன. இத்திட்டத்திற்காக ரூ.24 கோடி செலவாகும் என மதிப்பீடு செய்யப்பட்டது.கீழக்கரையில் பாதாள சாக்கடை திட்டத்திற்காக 5 இடங்களில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க இடம் தேர்வும் நடைபெற்றது,பொதுமக்கள் ப ங்களிப்பாக 10 சதவீதம் என்று கூறப்பட்டது.ஆனால் இத்திட்டம் துவங்கப்படவில்லை
பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு கீழக்கரை நகராட்சி தலைவராக அதிமுக சார்பில் ராவியத்துல் கதரியா தலைமையிலான நிர்வாகம் பொறுப்பேற்று 2013ல் 50 கோடி திட்ட மதிப்பீட்டில் இத்திட்டம் துவங்கும் என சென்ற ஆண்டு 2012 அறிவிக்கப்பட்டது.ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லாவும் இது குறித்து மாநில அரசை வலியுறுத்துவதாக அறிவித்திருந்தார் ஆனால் இன்று வரை இத்திட்டம் துவங்குவதற்கான எவ்வித அறிகுறியும் இல்லை.
அரசு தரப்பில் ஒதுக்கப்படும் நிதி எவ்வளவு, பொதுமக்கள் பங்களிப்பு தொகை எவ்வளவு போன்ற மதிப்பீடு தயாரிக்கப்பட வேண்டும். நின்றுபோன இத்திட்டத்தை விரைவில் துவக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்னளர்.
மக்கள் பிரதிநிதிகளும்,உள்ளூர் பிரமுகர்களும் இத்திட்டம் நிறைவேற முயற்சி எடுக்க வேண்டும்
முதலில் கட்டிடங்களை சரியாக அரசு விதிமுறைகளின் படி கட்டுவதற்கு அனுமதி தர வேண்டும், மீறுபவர்களுக்கு கடும் அபராதம் விதிக்க வேண்டும், கீழக்கரையில் 80% கட்டிடங்கள் பால்கனி மற்றும் வாசல் படிகள் பொது சாலையிலும் பொது இடங்களிலும் தான் இருக்கின்றன.. அணைத்து விதி மீறல்களையும் மக்கள் செய்து விட்டு கடைசியில் குறை மட்டும் மட்ட்ரவர்களை கூறுவார்கள்.. இதற்கு முதலில் தகுந்த நடவடிக்கை எடுக்கவும்.
ReplyDelete