ஏப் முதல் மே வரை 2மாதம் கடல் பாசி சேகரிப்பு இல்லை!கடல் சார் தொழிற்சங்கங்கள் முடிவு!
அகர் மற்றும் அல்ஜினேட் உற்பத்தியாளர்கள் சங்கம்(மோஸஸ்),மதுரை,கடல் பாசி வியாபாரிகள் சங்கம்,கீழக்கரை(உசைன் பாரூக்), ராமநாதபுரம் மாவட்ட மீன் பிடி தொழிலாளர் யூனியன்(பால்சாமி) ஆகியவற்றின் சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
நமது மன்னார் வளைகுடா பகுதியில் அமைந்துள்ள தீவுகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் விளையக்கூடிய கடல் பாசி வகைகளின் விளைச்சல் அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் வருடந்தோறும் இரண்டு மாத காலம் கடல் பாசி சேகரம் செய்வதை நிறுத்த வேண்டும் என்று மன்னார் வளைகுடா உயிர்கோள பாதுகாப்பு அறக்கட்டளை சி எம் எப் ஆர் ஐ,சி எஸ் எம் சி ஆர் ஐ,அகர் மற்றும் அல்ஜினேட் உற்பத்தியாளர் சங்க உறுப்பினர்கள மற்றும் கடல் பாசி வியாபாரிகள் கலந்து உரையாடி முடிவெடுத்ததன் பேரில் இந்த வருடம் 2013 ஏப்ரல் 1 முதல் மே 31 வரை இரண்டு மாத காலத்திற்கு கடல் பாசி சேகரம் செய்ய வேண்டாம் என கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
கட்டுப்பாட்டை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.