கீழக்கரை ராமநாதபுரம் சாலையில் தொடர்ந்து ஏராளமான வாகன விபத்துக்களும் அதனால் உயிரிழப்புகளும் ஏற்பட்டவாறு உள்ளது.
இந்நிலையில் ராமநாதபுரம் கீழக்கரை சாலையில் நேற்று பஸ் ஒன்று வேகமாக செல்லும் போது அவ்வழியே சென்ற காரை இடித்து விட்டு நிற்காமல் சென்றுள்ளது.இதனால் நிலைகுலைந்த கார் அவ்வழியே சென்ற பைக் மீது இடிக்க நேரிட்டு பைக் விபத்துக்குள்ளாகி அதில் சென்ற திருப்புல்லாணியை சேர்ந்தவர் சாலையில் விழுந்து காயமடைந்தார்.குடும்பத்தோடு காரில் வந்தவர்களுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை .காயமடைந்தவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
கீழக்கரையிலிருந்து அவ்வழியே இரண்டு வாகனங்களில் சென்ற கீழக்கரை தனியார் பள்ளி தாளாளர் தலைமையிலான குழுவினர் தங்களது வாகனங்களை நிறுத்தி வேண்டிய உதவிகளை செயதனர்.
இது குறித்து அவர்கள் கூறியதாவது,
கண்மூடித்தனமாக அதி வேகமாக இப்பகுதியில் வாகனங்களை ஓட்டுகிறார்கள்.இது போன்ற பயணம் தனக்கு மட்டுமல்ல மற்றவர்களுக்கும் ஆபத்தை விளைவிக்கும் என்பதை மறந்து விடுகிறார்கள்.இப்பகுதியில் போக்குவரத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும்.பைக்கில் செல்பவர்கள் கண்டிப்பாக ஹெல்மட் அணிய வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.